பருத்தியில் "இலைப்பேன்
மாசிப்பட்ட பருத்தி சாகுபடியின் 'இலைப்பேன்' தாக்குதலை கண்காணிக்க வேண்டும். பயிரின் இளம்பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையால், 'இலைப்பேன்' தாக்குதல் ஏற்படலாம். இலைகளின் கீழ்ப்புறம் பளபளப்பாகி, பின் பழுப்பு நிறமடையும். தீவிரமான நிலையில், இலைகள் மொறமொறப்பாகி விடும். பசுமை மாறி, பழுப்பு நிறமடைவதால், இலைகளின் மூலம் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, பயிர் வளர்ச்சி குன்றும். ஒருலிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி 'டைமீதோயேட்' மருந்து கலக்கலாம். அல்லது ஒன்றரை மில்லி 'பிப்ரோனில்' கலந்து கைத்தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால், 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை, இலைகளின் கீழ்ப்பகுதியிலும் மருந்து படும்படி தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் இலைகளில் படிவதற்காக, திரவ சோப்புகளை பயன்படுத்தலாம்.அமலா, பயிர் மருத்துவ நிலைய துறைத் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.