அறுவடைக்குப்பின் தானிய பாதுகாப்பு முறைகள்
தானிய சேதார பூச்சிகளை கட்டுப்படுத்த சில முறைகளை மட்டும் கடைபிடிப்பதன் மூலம் முழுமையாக இவைகளை கட்டுப்படுத்திட முடியாது. ஒருங்கிணைந்த தானிய பாதுகாப்பு முறைகளே தானிய சேமிப்புக்கு மிக்க உகந்தது.ஒருங்கிணைந்த தானிய பாதுகாப்பு முறைகள்:* அறுவடையின்போதே பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்.* விளைபொருட்கள் சேமிக்கப்படும் இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பாதுகாத்தல்.* விளைபொருட்களின் ஈரத்தன்மையை சரியான அளவில் பராமரித்தல்.* விளைபொருட்கள் காயவைக்கும் களங்கள், கோணிப்பை, குதிர்கள் மற்றும் கிடங்குகள் ஆகியவற்றில் பூச்சிக்கொல்லிகள் தெளித்தல்.* தானியங்கள் சேமித்து வைத்தபிறகு பூச்சிகள் வரும் முன்னரும் பூச்சிகள் தாக்கிய பின்னரும் பூஞ்சாண கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்துதல்.* தானியங்களுடன் சிலரக தாவர பொருட்களை கலந்து சேமித்து பூச்சிகளை கட்டுப்படுத்துதல்.* ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முறைகளை கடைபிடித்தல்.* அறுவடையின்போது பாதுகாத்த விளைபொருட்களை உற்பத்தியாகும் வயல்களில் இருந்து, சேமிப்பு கிடங்கிலிருந்து மற்றும் சேமிப்பு கலன்களில்இருந்தும் பூச்சி, பூஞ்சாணம் தாக்கி இழப்பை அதிகரிக்கின்றன. இதனை தடுக்க மாலத்தியான் 0.1 சதம் அளவில் சேமிப்பு கிடங்கிலும் கலன்களிலும் தெளிப்பது அவசியம்.சுற்றுப்புறத் தூய்மையை பராமரித்தல்: சுவர், தரை, கதவு, சன்னல், இடுக்குகள், குதிர்கள் இவற்றின் மீதும் மூடைகளை நகர்த்தும்போதும் ஆங்காங்கே பறந்தோ ஊர்ந்தோ சென்று பூச்சிகள் பரவுகின்றன. விளைபொருட்களை சேமிக்கும் முன்பு கொள்கலன்கள் மற்றும் அறைகளை பூச்சி மற்றும் பூஞ்சாணம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சேமிப்பு அறைகளின் துவாரங்கள், சுவர்விரிசல் ஆகியவற்றில் வெடிப்பு அற்றதாக சிமென்ட் பூசி, சீர்செய்ய வேண்டும். எலிவளை இருப்பின் அதை முற்றிலும் எலி தாக்காமல் சீர்செய்ய வேண்டும். சுவர்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். கதவுகளின் கீழ் பகுதிகள் 25 செ.மீ. வரை இரும்பு தகட்டால் அடைக்க வேண்டும். சேமிப்பு அறையின் சன்னல், காற்று வெளியேற்றும் மின்விசிறி பொருத்தியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் இரும்புவலை சன்னல்கள் பொருத்த வேண்டும். தானியங்களின் ஈரத்தன்மையை பராமரிக்க சேமிக்கப்படும் தானியங்களை சிபாரிசு செய்யப்படும் ஈரப்பதத்திற்குள் காயவைத்து சேமிக்க வேண்டும். பொதுவாக ஈரப்பதம் 8 முதல் 10 சதத்திற்குள் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருப்பது மட்டுமல்லாமல் பூசணங்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்துகின்றன. இதனால் தானியங்கள் நிறம்மாறி துர்நாற்றம் ஏற்பட்டு உண்பதற்கு தகுதியற்றதாகிவிடும். எனவே, ஈரப்பதத்தைச் சரியான அளவில் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகிறது. தொடர்புக்கு: துணை இயக்குனர், வேளாண்மை வணிகம், ராமநாதபுரம்.போன்: 04567-220 245.-கே.சத்தியபிரபா, உடுமலை.