உள்ளூர் செய்திகள்

பண்ணை மாடுகள் உற்பத்தி பெருக்க, ஐடியா

பண்ணை மாடுகள் உற்பத்தி பெருக்கம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை உதவி பேராசிரியர், சபாபதி கூறியதாவது:கறவை மாடு கன்று போடும் போது, ஆண் கன்று அல்லது பெண் கன்று ஈனும். ஆண் கன்றாக இருந்தால், அது வளர்ந்த பின், இறைச்சிக்கு, விற்பனை செய்து விடுகின்றனர். பெண் கன்றாக இருந்தால், மாடு வளர்ப்பிற்கு உபயோகப்படுத்துகின்றனர்.இதை ஆரம்பத்தில் தவிர்க்க, இரு கன்று குட்டிகளில், ஏதேனும் ஒரு ரகத்தை, மாடு வளர்ப்போர் தேர்வு செய்து, செயற்கை கருவூட்டலில், சினை ஊசி போட வேண்டும்.பாலினம் அறிந்து, சினை ஊசி போடும் அளவிற்கு, சினை ஊசிகள் சந்தைக்கு வந்துள்ளன.கால்நடை மருத்துவர்களை முறையாக அணுகி, தமக்கு தேவையான கன்று குட்டிகளை, ஊசி மூலம் பெறலாம். இது, பண்ணை மாடுகள் வளர்ச்சிக்கு உதவும்; பால் உற்பத்தியும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94424 85691


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !