பழம்பெரும் நெல் ஆடுதுறை 39
ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்த ஆடுதுறை 39 ரகம் தமிழகத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.மதுரை பகுதியில் ஆடுதுறை 39: ஆடுதுறை 39 ரகத்தை விவசாயிகள் கல்சர் நெல் என்று சொல்வார்கள். மதுரை பகுதியில் ஆடுதுறை 39 ரகம் இரண்டாவது பயிராக சாகுபடி செய்தபோது ஆடுதுறை 43 மற்றும் 45 ரகத்தைவிட அதிக மகசூலினைக் கொடுக்கின்றது. இந்த ரகம் ஐ.ஆர்.8 மற்றும் ஐ.ஆர்.20 ரகங்களை கருவொட்டு செய்து உருவாக்கப்பட்டது. மழை, பனி, குளிர் பட்டங்களில் பூஞ்சாள நோய்களால் பாதிக்கப் படுவதில்லை.தஞ்சை தாளடியில் ஆடுதுறை 39: தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் தாளடி பட்டத்தில் ஆடுதுறை 39 ரகம் மிக சிறப்பாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் நல்ல மகசூலினைக் கொடுக்கின்றது. மணல்பாங்கான நிலத்திற்கும் ஏற்றதாக உள்ளது. வயதான நாற்றினை நடவேண்டிய நிர்ப்பந்தத்திலும் மகசூல் பாதிக்கப்படுவதில்லை. ஆடுதுறை 39 ரகத்தில் எலிவெட்டு பாதிப்பு மிகவும் குறைவு. மற்றும் அறுவடை சமயம் பயிர் கீழே சாய்வதில்லை.புழுதிக்கால் சாகுபடியில் ஆடுதுறை 39: தமிழகத்தில் மிக அதிக பரப்பளவில் புழுதிக்கால் சாகுபடி செய்யும் மாவட்டம் காஞ்சிபுரம். வடகிழக்குப் பருவமழை உதவியினால் இந்த சாகுபடி பல வருடங்களாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. ஆவணியில் நிலத்தை உழுது நன்கு மக்கிய எருக்களை இட்டபிறகு நீரில் ஊறப்போடாத விதைகள் ஏர்சாலிலோ, கொருகலப்பை உபயோகித்தோ விதைக்கப்படும். முளைத்த பயிர் சுமார் இரண்டு மாதங்கள் மானாவாரி பயிர்போல் வளர்ந்து வரும். பின் ஐப்பசி மழையில் ஏரிகள் நிரம்பிய உடன் பாசனப் பயிராக மாறிவிடும். இந்தமுறை சாகுபடிக்கு ஆடுதுறை 39 ரகம் சிறப்பாக உள்ளது. விதை விதைத்த 135ம் நாளில் அறுவடைக்கு வரும். 1.5 ஏக்கரில் 45 மூடை மகசூல் இந்த ரகம் கொடுத்துள்ளது. வைக்கோல் விற்பனையிலும் வருவாய் உண்டு. பல விவசாயிகளால் இன்றும் பாராட்டப் படுவது ஆடுதுறை 39 ரகமாகும்.கிருஷ்ணகிரி பகுதியில் ஆடுதுறை 39: கிருஷ்ணகிரி பகுதியில் தோட்டக்கால் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு அதிக அளவில் சாகுபடிக்கு உதவுவது கிணற்றுப் பாசனம்தான். இங்கு விவசாயம் எருது மாடுகள் வைத்து செய்யப்படுகின்றது. மேலும் கறவை மாடுகளும் உள்ளன. இவைகளுக்கு வைக்கோல் தேவைப்படுகின்றது. தோட்டக்கால் நிலையில் மா சாகுபடி செய்தாலும் நெல் சாகுபடியும் சிறப்பாக செய்யப்படுகின்றது. நெல் சாகுபடியில் வியாபார பிரச்னையே கிடையாது. பல விவசாயிகள் இரண்டாம் பயிராக ஆடுதுறை 39 ரகத்தை மழை, பனி, குளிர் இருக்கும் பட்டத்தில் சாகுபடி செய்கிறார்கள். இங்கு விவசாயி விருபாக்ஷன் நெல் சாகுபடி தொடர்ந்து செய்துவருகிறார். மழை வந்தாலும் பயிர் பொதுவாக பாதிப்படைவது இல்லை. பூச்சி, பூஞ்சாள நோய் இல்லை. இங்கு விவசாயிகளுக்கு பாசன நீர் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில்இருந்தும் கிடைக்கின்றது. சமீபத்தில் இவர் அறுவடை செய்த ஆடுதுறை 39 ரகம் மழையால் பாதிப்பில்லாமல் வந்தது. இருப்பினும் நெல் மகசூல் பாதிக்கப்பட்டு இதனால் நஷ்டம் வருமோ என்று பயந்தபோது அறுவடைக்குப் பின் விவசாயிக்கு ஏமாற்றம் மறைந்து சந்தோஷம் ஏற்பட்டது. விபரம் கீழே:நாற்று விட்ட மாதம்: கார்த்திகை - தேதி:5.12.2011நடப்பட்ட நாற்றின் வயது- ஒரு மாதம்நட்ட நாளில் இருந்து அறுவடை வரை நாட்கள்: 110 நாட்கள்பயிரின் மொத்த வயது - 142 நாட்கள்3.88 ஏக்கர்களில் மொத்த மகசூல்-103 மூடைகள் (ஈர நெல்) (மூடை 75 கிலோ) (மூடை விலை ரூ.620/-)3.88 ஏக்கர்களில் மொத்த மகசூலின் மதிப்பு (103துரூ.620) = ரூ.63,860/-3.88 ஏக்கரில் வைக்கோலில் வரவு 7 டிராக்டர் லோடு - ஒரு டிராக்டர் லோடு ரூ.6000/- (ரூ.6000/-து7) நெல் மகசூலைவிட பல மடங்கு அதிகமாக ரூ.42,000 வைக்கோல் மகசூல் கிட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஏற்பட்டது.குறிப்பு: சாதாரணமாக ஒரு ஏக்கரில் வைக்கோலில் வரவு ரூ.4,000. 3.88 ஏக்கரில் வைக்கோலில் வரவு சுமார் ரூ.16,000. தற்போது ஒரு ஏக்கரில் வரவு ரூ.10,820 (அல்லது) ரூ.11,000. 3.88 ஏக்கரில் தற்போது வரவு ரூ.42,000. விவசாயிக்கு தற்போது சாதாரண முறையைவிட சுமார் இரண்டரை மடங்கு அதிக வருவாய் வைக்கோலில் கிடைத்துள்ளது.-எஸ்.எஸ்.நாகராஜன்