ஓங்கோல் பகுதியில் கொண்டைக்கடலையில் இயந்திர சாகுபடி
கொண்டைக்கடலை சாகுபடியில் கீழ்க்கண்டபடி லாபம் கிடைக்கிறது.ஏக்கர் சாகுபடி செலவு - ரூ.பைநிலம் தயாரிப்பு, உரமிடல், விதைப்பு முதலியன - 2,000.00உரமிடல், களை, பயிர் பாதுகாப்பு முதலியன - 2,000.00அறுவடை முதலியன - 2,000.00மொத்த செலவு - 6,000.00ஏக்கர் மகசூல் 10 குவிண்டால்ஒரு குவிண்டாலுக்கு கிடைத்த விலை - 3,500.0010 குவிண்டால் விலை - 35,000.00சாகுபடி செலவு (ரூ.6,000) போக வரவு - 29,000.00ஓங்கோல் பகுதியில் எருதுகளை வைத்துக்கொண்டு விவசாயம் செய்ய இயலாத இப்பகுதியில் கூலி ஆட்கள் கிடைப்பதே இல்லை. ஆனால் சாகுபடி செய்வதற்கு அதிக பரப்பளவு உள்ளது. அதிக பரப்பு சாகுபடி செய்ய விவசாயிகளால் இயலுவதில்லை. ஓங்கோல் பகுதியில் விவசாயத்தை இயந்திரங்களைக் கொண்டு சாகுபடி செய்வது அவசியமாகின்றது. இங்கு நிலங்கள் கடுமையான களிமண்ணினைக் கொண்டுள்ளது. பயறு வகைப்பயிரான கொண்டைக் கடலையை அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்ய டிராக்டர்கள் அதிகம் தேவைப்படுகின்றன. களிமண் நிலங்களில் பூமியில் மழை, ஈரம் தாங்க ஆழமாக உழவேண்டியது மிகவும் அவசியமானது. இப்பணியை சிறப்பாக செய்வதற்கு டிராக்டர்கள் இழுக்கும் முறக்கலப்பைகள் உதவுகின்றன. அடுத்து பூமியில் விதைக்கும் விதையை சீராக முளைக்க வைக்க பூமியை சிறு கட்டிகளாக இருக்கும்படி உழவேண்டும். நிலத்தினை பொடியாகும்படி உழக்கூடாது. சிறு கட்டிகள் இருந்தால்தான் விதைகள் சீராக முளைக்கும். நிலம் பொடியாக இருந்தால் விதைகள் ஆழத்தில் புதைந்துவிடும். அதனால் முளைப்பு சதவீதம் மிகவும் குறைந்துவிடும். (கொண்டைக்கடலை விதை பருமனாக மற்றும் எடையோடு இருக்கும்) அடுத்தபடியாக பயிர் அறுவடைக்கும் கருவிகள் தேவைப்படுகின்றது. தற்போது அறுவடைக்கு பெரிய அறுவடை இயந்திரங்கள் உதவுகின்றன. பொதுவாக இயந்திர சாகுபடியில் இரண்டு நன்மைகள் கிட்டுகின்றன.1. அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.2. இயந்திர சாகுபடியில் அதிக அளவு மகசூல் கிட்டுகின்றது.உழவர் விழா: ஆந்திரா பகுதி ஓங்கோலில் பிப்ரவரி 25ம் தேதி (25.2.2012) ஒரு உழவர் விழா நடந்தது. விவசாய கல்லூரி பாபட்லா மற்றும் லாம் பாம் குண்டூர் இவைகளைச் சேர்ந்த தலைசிறந்த விவசாய விஞ்ஞானிகள் விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நெல் சாகுபடி, பருத்தி சாகுபடி, பயறு வகைகள் இவைகளைப் பற்றி விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் செய்துகொண்டிருந்தனர். இந்த விழாவில் கொண்டைக் கடலை பற்றியும் விஞ்ஞானிகள் பேசினர். ஓங்கோலைச் சேர்ந்த விவசாயி சிவசாம்பி ரெட்டியை அவர் பயறு வகைப் பயிரில் செய்துள்ள சாதனைக்காக விஞ்ஞானிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சிவசாம்பி ரெட்டி பாராட்டை ஏற்றுக்கொண்டு விவசாயிகளை பயறு வகைப் பயிர்களின் மகசூலினை அதிகரித்து தாங்கள் பயன் பெறுவதோடு பயறுவகைப் பயிர் உற்பத்தியில் தன்னிறைவுபெற நாட்டிற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக விவசாய விஞ்ஞானிகள் நமக்கு உதவ காத்துக் கொண்டு இருக்கின்றனர். எனக்கு விருது அளித்த விஞ்ஞானிகளுக்கு நான் நன்றி சொல்வதோடு நீங்களும் இந்த விஞ்ஞானிகளை அணுகி உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க அறிவுரைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.-எஸ்.எஸ்.நாகராஜன்.