உள்ளூர் செய்திகள்

"புதினாவின் மருத்துவ பலன்கள்

புதினாவின் தாவரப் பெயர், 'மென்தா அர்வேன்சிஸ்'. இது 'லாமினேசியே' குடும்பத்தைச் சேர்ந்தது. இது உலகம் முழுவதும் உணவு, மருந்து, அழகு பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இக்கீரை 'மின்ட்' என்றும், புதியன் மூலி, ஈயெச்சக்கீரை என்றும் அழைக்கப்படுகிறது.புதினாவில் 40 வகைகள் உள்ளன. வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர்மின்ட் புதினா உட்பட ஏராளமானவை உள்ளன. புதினாவில் உயிர்ச்சத்துக்கள் ஏ,பி, சி, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது. இதில் உள்ள 'ஆன்டி ஆக்ஸிடென்ட்' பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும்.புதினாவின் துளிர் இலைகளின் காரமும், சுவையும் அசைவ உணவுகளான பிரியாணி, கட்லெட், ஜீரா ரைஸ், குருமா, புலாவ் உணவுகளுக்கு மணமும், ருசியும் அதிகம் தருகிறது. இட்லி, தோசை, போண்டா, சமோசா, பஜ்ஜி, வடைகளுக்கு தொட்டுக் கொள்ள 'சட்னி'யை தருகிறது. புதினா இலைகளை சேர்த்து தேநீர், பழரசங்கள் தயாரிக்கலாம். புதினாவை தவிர மற்ற கீரைகள், காய்கறிகளுடன் சேர்த்து பொரியல் செய்யலாம். புதினா பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. பத்து புதினா இலைகளைக் கழுவித் தின்றாலோ அல்லது இலைகளை கொதிக்க வைத்து, ஆறிய நீரை அருந்தினாலோ அஜீரணம், வயிற்று பொருமல், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நோய்கள் அகலும். வயிற்றுப் பசி உண்டாகும்.இதன் தண்டுகளும், இலைகளும் கொதிக்க வைத்த நீரில் தேன், எலுமிச்சைச் சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்துவர, வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள், வயிற்றுவலி, காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும். புதினாத் துவையல் வாந்தி, குமட்டலை தீர்க்கும். புதினாவுடன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்த தேநீர் குடித்தால் நன்கு ஜீரணமாகும்.ஒரு வயது குழந்தைக்கு சிறிதளவு புதினாச்சாறு கொடுத்தால் வயிற்று பிரச்னை தீரும். இஞ்சி, புதினாவை அரைத்து நீரில் கொதிக்க வைத்து அருந்த வாந்தி குறையும். நெஞ்சு எரிச்சல், இருமல், வாய்நாற்றம் தீரும். இதுபோல வியக்கத்தகுந்த மருத்துவ பலன்களைத் தரும் புதினா கீரையை வயல்களிலும், தோட்டங்களிலும், இல்லங்களி லும் வளர்த்து பயன்பெறலாம்.கி.ராஜேந்திரன், மேலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !