உள்ளூர் செய்திகள்

பட்டு உற்பத்தியின் ஆதாரம் மல்பெரி

இந்தியாவில் விவசாயிகள் அதிக விளைச்சல் வேண்டும் என்ற போட்டி போட்டு கொண்டு அதிக ரசாயன உரங்களை இடுகின்றனர். பயிர் அதிக பச்சையாய் வளர்த்து தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை ஈர்க்கும். தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண்ணில் தன்மை மாறும் நன்மை தரும் பூச்சிகளும், நுண் உயிர்களும் அழிக்கப்படும். உற்பத்தி ஆகும் கீரைகள், காய்கள், பழங்களும், நச்சுத்தன்மையடையும். எனவே, மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் கேடு விளைவிக்கின்றன. ஆனால் மண் புழுக்கள் உழாத நிலங்களில் கூட உழும் ஏராக செயல்பட்டு மண்ணை வளப்படுத்துகின்றன. எனவே மண் புழு உரம் இட்டால் இலை மகசூல் அதிகரிக்கும். ரசாயன உரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மண் புழு உரம், தொழு உரம்போட்டு ரசாயன உரங்களை குறைத்தால் ஒரு ஆண்டில் மண் புழுக்கள் நிலம் முழுவதும் பெருகி நிலம் வளமாகும். மல்பெரி மகசூல் பெருகும். பட்டுப்புழு வளர்க்க மல்பெரி தோட்டங்களை வைத்துள்ள விவசாயிகள் ஊடு பயிர் அவசியம். தொடர்புக்கு 95662 53929.- எம்.ஞானசேகர்விவசாய ஆலோசகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !