உள்ளூர் செய்திகள்

காளான் வளர்ப்பு பயிற்சி

இயற்கை இவ்வுலகத்தைப் பல்வேறு வளங்களின் உறைவிடமாக உருவாக்கியிருக்கின்றது. இயற்கை தந்த வளத்தை நாம் பல்வேறு வகைகளில் பயன்படுத்திக் கொள்கிறோம். இவற்றில் காளான்கள் முக்கியமானவை. காளான்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டு வந்துள்ளன. காளான்களில் அடங்கியுள்ள மணம், சுவை, ஊட்டச்சத்து ஆகியவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும் இயல்பினை பெற்றிருக்கின்றன.காளான்களின் சிறப்பம்சங்கள்:* புரதச்சத்து நிறைந்தவை. * அமினோதிரவம் அடங்கியது. * மாவுச்சத்து குறைவாக (5.3 சதம்) உள்ளது. * கொழுப்புச்சத்து குறைவாக (0.36 சதம்) உள்ளது. * வைட்டமின் B, C, D உள்ளது. * இரத்தக்கொதிப்பு மற்றும் இருதயநோய்க்கு நல்லது. * நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. * எளிதில் ஜீரணிக்கக் கூடியது. * எத்தரப்பினரும் விரும்பி உண்ணும் வகையைச் சேர்ந்தது.தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் சிப்பிக்காளான் இயற்கையிலேயே நிலவும் தட்பவெப்ப நிலையைப் பயன்படுத்தி வளர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பண்ணைக்கழிவுப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி காளான்களை வளர்க்க முடியும். உணவுக் காளான் உற்பத்தி ஒரு குடிசைத் தொழிலாகப் பெருகி வளர்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகளுக்கு உபரி வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பு.மேலும் சிப்பிக்காளான் வளர்ப்பில் பயிற்சி பெற விரும்புவோர் தங்கள் பெயர், முகவரியுடன் நேரிலோ, ரிப்ளை கார்டு தபால் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூபாய் 250/- (ரூபாய் இருநூற்றி ஐம்பது மட்டும்) குறைந்தது 25 நபர்கள் முன்பதிவு செய்தவுடன் பயிற்சி தேதி முடிவு செய்யப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு திருவில்லிபுத்தூர், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.அமலா பாலு தெரிவித்துக் கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !