உள்ளூர் செய்திகள்

மனித குலம் காக்கும் இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் செய்ய பணம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும். இதுவரை அதிக நஞ்சு விவசாயம் செய்து மண்ணை மலட்டுத் தன்மையாக்கி விட்டோம்; நீரை விஷமாக்கி விட்டோம். இந்த பூமி இறைவன் நமக்கு கொடுத்த அற்புத வரம். அதன் ஒவ்வொரு சென்டி மீட்டர் நிலத்தையும் நாம் முழு பாதுகாப்பு தந்து பேண வேண்டியது நம் கடமை. இயற்கை விவசாயம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாதம் தோறும் 6ம் தேதி மிகக்குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்கிறது.தன்னார்வ நிறுவனங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், துறைகள் களம் இறங்கி இன்று 'ஒரு காசு சம்பாதித்தால் இரு காசு தேறும்' என்ற அற்புத தத்துவத்திற்கு வழிகோலும் செலவில்லா, பழமையான வேளாண் உத்திகள் குறித்து பறைசாற்றி வருகின்றன. இயற்கை அற்புதமாக தந்த கால்நடைகளையும் இம்முறையில் வளர்த்து விவசாயிகள் பயனடைய வேண்டும். சந்தேகங்களுக்கு அரசு அங்ககச் சான்றிளிப்புத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறையை அணுகலாம். தொடர்புக்கு 98420 07125.- டாக்டர் பா. இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர், தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !