கரும்பு சாகுபடியில் உற்பத்தியும் உற்பத்தித் திறனும்
உற்பத்தி திறனை அதிகரிக்க காரணங்கள்: சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த நிலத்தை ஆழமாக உழுது, கட்டிகள் இல்லாத நிலையை உண்டாக்க வேண்டும். நிலத்திற்கு தாராளமாக இயற்கை உரம் (தொழு உரம்) இட்டு பூமியின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். நடுவதற்கு ஏற்ற விதை கரும்பினை உபயோகிக்க வேண்டும். 6 முதல் 7 மாத வயதுடைய கரும்பில் இருந்து விதை தயாரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்க வேண்டும். நிலத்தை டிராக்டர் மூலம் ஆழமாக மூன்று முறை இடைவெளி விட்டு மண் நன்றாக பொலபொலப்பு அடையும் வரை உழவேண்டும். இதனால் கரும்பு பயிர் சாயாமல் நிற்க ஏதுவாகிறது.கரும்பு சாகுபடிக்கு முன்பட்டம் சிறந்தது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாகுபடியை துவங்க வேண்டும். கரும்பு சீரான வளர்ச்சியை பெற்று பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படாமல் நல்ல மகசூல் கிட்டும். சாகுபடிக்கு நல்ல ரகத்தை தேர்ந்தெடுக்கலாம். சிறந்த சாகுபடிக்கு ஏற்படும் செலவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. இதை படிக்கும் போது பொதுவாக கரும்பு சாகுபடி முறையும் தெரிந்துகொள்ளலாம்.குறிப்பு: கரும்பு நடவு செய்த 12வது மாதத்தில் கரும்பு அறுவடை மேற்கொள்வது சிறந்தது. கரும்பு ஆலைகள் குறிப்பிட்ட காலத்தில் அறுவடைக்கு உத்திரவு கொடுத்து, நல்ல விலை அளித்து விவசாயிகள் நலனை காக்க வேண்டும்.சாகுபடி செலவு ஒரு ஏக்கருக்கு: ரூ.41,040.00 மகசூல் 40 டன்கள் ஒரு ஏக்கரில்ஒரு டன் விலை (தனியார் சர்க்கரை ஆலை பழைய சீவரம்) ரூ.2,250 x 40 டன்கள் - ரூ. 90,000.00வரவு - ரூ. 90,000.00செலவு - ரூ. 61,000.00லாபம் - ரூ. 29,000.00கரும்பு சாகுபடியில் வெல்லம் காய்ச்சுவது: மாகரல் கிராமம் (காஞ்சிபுரம் மாவட்டம்) பஞ்சாபகேசனை ஏக்கரில் ரூ.29,000 லாபம் எடுத்ததற்கு பாராட்டியபோது அவர், ''என்னால் இயன்றதை செய்தேன். ஆனால் மேலும் பாடுபட்டால் கரும்பினை விற்காமல் வெல்லம் செய்து விற்றால் ஏக்கரில் ரூ.50,000 லாபம் கிடைக்கும்'' என்றார்.விவசாயிகள் கவனிக்க: தற்போது கரும்பு சாகுபடியில் முன்னேற்றம் காண முடிகிறது. எக்டேரில் 75 டன் மகசூலாக இருந்தது. தற்போது 100 டன்னாக உயர்ந்துள்ளது. விவசாய இலாகா அதிகாரிகளும் ஆலைகளைச் சேர்ந்த கரும்பு சாகுபடிஅதிகாரிகளும் அதிக மகசூல் எடுக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆதலால் விவசாயிகள் மேற்கண்ட அதிகாரிகளைச் சந்தித்து தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்தில் கரும்பு உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும்.-எஸ்.எஸ்.நாகராஜன்