சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் காலாநமக் ரக அரிசி
'காலாநமக்' பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த, மலையாங்குளம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், காலாநமக் நெல் தனி ரகமாகும். இது, 130 நாளில் விளைச்சல் தரக்கூடிய ரக நெற்பயிராகும்.மேலும், வெள்ளத்தை தாங்கி வளரக்கூடியது. இந்த நெல் சாகுபடியில், எவ்வித நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் வராது. இதன் நெல்மணிகள், கறுப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.ஒரு ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய ரகத்தில் கிடைக்கும், நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, கூடுதல் வருவாய் கிடைக்கும்.இந்த அரிசி, சாப்பிடுவதன் வாயிலாக, சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு, அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட அரிசியாகும். மூளையின் செயல்பாடுகளை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில் வரும் சிறிசிறு தொந்தரவுகளை சரி செய்ய கூடிய தன்மை உள்ளது. உடல் பலம், ஆத்ம பலம் பெற துறவிகள் உண்ணும் அரிசி இது என, கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: என். மகாலட்சுமி98414 42193