சம்பா/பாசனப்பருவ நெல் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி
நெல் பயிரினை குலைநோய், பழுப்பு, இலைப்புள்ளி நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், ஊதுபத்தி நோய், நெல்மணி நிறமாற்ற நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவை விதைகள் மூலமாகவும் பரவுகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துக்களும் முளைத்து சாதகமான சூழ்நிலையில் நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.எப்படி: நெல் விதைகளை ஊறவைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்தவுடன் நீரில் ஊறவைக்க வேண்டும்.சூடோமோனாஸ் கிடைக்காவிடில் நெல் விதைகளை ஊறவைப்பதற்கு முன்பாக கார்பன் டசிம் அல்லது பைரோகுயிலான் அல்லது டிரைசைக்குளோஜோல் (வணிகப்பெயர் பீம்) போன்ற மருந்துகளில் ஒன்றினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து ஒரு நாள் வைத்தி ருந்து பின்னர் வழக்கம் போல் நீரில் ஊறவைத்து முளைப்பு கட்டி விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் குலைநோயினை தடுக்க இயலும்.மேலும் உழவர்கள் தங்களது வயல்வெளிப் பிரச்னைகளுக்குத் தக்க ஆலோசனை பெற பாதித்த பயிர் மாதிரியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலை யத்திலுள்ள பயிர் மருத்துவ நிலையத்தினை நேரில் அணுகுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.ஜெயராஜன் நெல்சன் கேட்டுக் கொள்கிறார்.எஸ்.ஜெயராஜன் நெல்சன்,பேராசிரியர் மற்றும் தலைவர்,பருத்தி ஆராய்ச்சி நிலையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.