சிறுமலை வாழை நம்மூர் நிலத்திலும் விளையும்
சிறுமலை வாழை பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச்சேர்ந்த விவசாய பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியில் விளையும், வாழை பழம் நம்மூர் மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.களர் உவர் நிலத்தை தவிர்த்து, மணல் கலந்த களிமண், செம்மண், மணல்கலந்த செம்மண் உள்ளிட்ட பல விதமான மண்ணுக்கு சிறுமலை வாழை அருமையாக வளரும். ஒரு ஆண்டிற்கு ஒரு முறை, வாழை அறுவடை செய்யலாம்.பொதுவாக, மலை வாழை பழம் என்றால், விரல்கள் அளவில், சிறிதாக இருக்கும். இந்த சிறுமலை பகுதியில் விளையும் வாழை சற்று வித்தியாசமாக, நீளமாக இருக்கும். இந்த பழத்தின் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.மலையில் விளையும் வாழை, நிலத்திலும் அருமையாக விளைகிறது. மலை பகுதியில் எடுக்கும் மகசூலை போல், நிலத்தில் விளையும் வாழையிலும் மகசூல் எடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,94441 20032