உள்ளூர் செய்திகள்

சிறு தானிய சாகுபடி கை நிறைய லாபம்

ஏழைகளின் உணவு என்று சொல்லப்பட்ட சிறு தானியங்களாகிய சோளம், கம்பு, கேழ்வரகு, குறு தானியங்களாகிய வரகு, குதிரை வாலி, சாமை, தினை போன்றவை செல்வந்தர்களின் உணவாக மாறியுள்ளது. இந்த தானியங்களை நாம் ஒதுக்க தொடங்கியது முதல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தொற்று ஆரம்பித்து விட்டன. சிறு தானியங்களில் வைட்டமின், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தாது உப்புக்கள் போன்ற அனைத்து சத்துக்களும் நிரம்பி உள்ளன. சிறு தானியங்களை உண்பதால் உடலில் ஊட்டச்சத்து அதிகரிப்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாகும்.சிறு தானிய பயிர்களை அனைத்து வகையான நிலங்களிலும் பயிரிடலாம். மேலும் இப்பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மை உடையவை. குறைந்த அளவே நீர் தேவை ஏற்படும். சிறு தானியங்களை பயிரிடுவதன் மூலம் கால்நடைகளுக்கு தேவையான உணவை பெற்று கொள்ளலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் குதிரை வாலி, கம்பு கோ - 10, சோளம் கோ - 32, சாமை அத்தியந்தல் - 1, தினை அத்தியந்தல் - 1 போன்ற ரகங்களை வெளியிட்டுள்ளது. அதிக மகசூல் தரக்கூடிய சிறு, குறு தானிய ரகங்களை பயிரிட்டு அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.- டாக்டர்.செல்வி ரமேஷ்திட்ட ஒருங்கிணைப்பாளர்- டாக்டர்.செல்வராணிதொழில்நுட்ப வல்லுனர்வேளாண் அறிவியல் நிலையம், மதுரை97897 46456


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்