உள்ளூர் செய்திகள்

கத்தரியை தாக்கும் சிறு இலை நோய்

கத்தரி பயிரை தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சிறு இலை நோயாகும். இந்நோய் கத்திரி பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படுகிறது. இந்நோய் 'பைட்டோபிளாஸ்மா' எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.நோய் பாதித்த செடிகளில் வளர்ச்சி குன்றி விடும். பாதித்த செடிகள் சிறுசிறு இலைகளாக அடர்ந்த நிலையில் சிறிய இடைக்கணுக்களை கொண்டு காணப்படும். பூக்கள் முழுவதுமாக பச்சை இலைகளாக மாறி விடும். பூக்கள் மலட்டுத்தன்மை அடைந்து விடும். காய்கள் வளர்ந்தாலும் அதில் விதைகள் சுருங்கி விடும். கத்தரி சிறு இலை நோய் தத்துப்பூச்சிகளால் பரவுகிறது.கட்டுப்படுத்தும் முறைநோயுற்ற செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும். ஒரு டாங்கிற்கு 'இமிடாகுளோபிரிட்' 5 மில்லி அல்லது 'அசிட்டாம்ப்பிரைடு' 20 கிராம் வீதம் விதைத்த 30, 40 மற்றும் 60 வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் காரணியை கட்டுப்படுத்தலாம். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சொப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலந்து தெளிக்கலாம்.- முனைவர். ரா.விமலா, தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !