சின்ன சின்ன செய்திகள்
குறுகியகால துவரை ரகங்கள் - சாகுபடி நுட்பங்கள்: நிலத்தை நன்கு உழுது பகுதி பாத்திகள் அல்லது பரிந்துரை செய்யப்பட்ட பயிர் இடைவெளிக்கேற்ற சால்கள் அமைத்தல். பருவம்: மே மற்றும் செப்டம்பர் முதல்வாரம், ஜனவரி கடைசி வாரம் (விதைப்பு). ரகங்கள்: கோ(ஆர்ஜி)7, வம்பன்3. விதை அளவு: 20 கிலோ/எக்டர். விதைநேர்த்தி: சூடோமோனாஸ் -10கிராம்/ கிலோ விதை. டிரைகோடெர்மா விரிடி-4 கிராம்/கிலோ விதை, ரைசோபியம் மற்றும் 60 கிராம்/கிலோ விதை. பாஸ்போ பாக்டீரியா (3 பாக்கெட்டுகள்)இடைவெளி: 60 x 45 செ.மீ. நுண்ணூட்ட கலவை: 5 கிலோ/ எக்டர். உர நிர்வாகம்: தழை, மணி, சாம்பல் சத்து, கந்தகச்சத்து 20:50:25:10 (இறவை), 12.5 : 25:12.5:10 (மானாவாரி) கிலோ/ எக்டர்.களை நிர்வாகம்: விதைத்த 3ம் நாள் பெண்டி மீத்தோலின் 2.5 லிட்டர்/எக்டர். அகன்ற இலைகள் உள்ள களைகளுக்கு இமாஜித்தா பையர் - 600 மில்லி/எக்டர், புல்வகைகளுக்கு - குயிசலோபாவ் ஈத்தைல் - 1000மிலி/எக்டர் கலந்து விதைத்த 15ம் நாள் ஈரப்பதமுள்ள மண்ணில் தெளிக்க வேண்டும்.பயிர் பாதுகாப்பு: சாறு உறிஞ்சும் பூச்சிகள் - மீத்தைல் டெமட்டான் 25 இசி 500மிலி/எக்டர் அல்லது டைமீத்தோயேட் 30 இசி, 500மிலி/ எக்டர், 25 முதல் 40 நாட்களில் தெளிக்கவும். காய்துளைப்பான் (புள்ளிக்காய்ப்புழு) இன்டாக்ஸா கார்ப்-375 மிலி/எக்டர் பூக்கும் தருணத்தில் தெளிக்கவும்.விளைச்சல்: 700-1000 கிலோ/ எக்டர். நாற்று நடவு முறைக்கு ஏற்ற ரகம்: கோ(ஆர்ஜி)7 (120-130 நாட்கள்). நாற்று நடவு: மே மாதம். (தகவல்: த.வே.ப.கழகம், உழவர் பெருவிழா கையேடு, 2013).* திருந்திய நெல் சாகுபடி: இம்முறையில் குறைந்த விதை அளவு (ஏக்கருக்கு 3 கிலோ), இளவயது நாற்றுக்கள் (12-15 நாள்), அதிக இடைவெளி (25 x 25செ.மீ.) கருவிமூலம் களை எடுத்தல், நீர் மறைய நீர் கட்டுதல், இலைவண்ண அட்டையைப் பயன் படுத்தி தழைச் சத்தை இடுதல் ஆகியவை முக்கிய நுட்பங்களாகும். இம்முறையில் 25 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது.நன்மைகள்: குறைந்த சாகுபடி செலவு, ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போது மானது. களையைக் கட்டுப்படுத்த களைக்கருவி உபயோகிப்பதால் ஆள் செலவு குறைவு. களைக்கருவி உபயோகிப்பதால் பயிர் வளர்ச்சி அதிகமாகிறது. வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. பாசன நீர்த்தேவை 40-50 சதவீதம் குறைவு. அதிக வேர் வளர்ச்சி, அதிக தூர்கள், அதிக கதிர்கள், அதிக மணிகள், அதிக தானிய, வைக்கோல் மகசூல், அதிக லாபம்.* திருந்திய நெல் சாகுபடி அட்டவணை (குறுகிய கால நெல் ரகங்கள்) - விதைத்தபின் மேற்கொள்ளப் பட வேண்டிய செயல்பாடுகள்:1வது நாள் - நாற்றங்கால் விதைப்பு5வது நாள்- தொழு உரம்/ மக்கு உரம் இடுதல், 6-12வது நாள் - நடவு வயல் தயாரித்து சமப்படுத்துதல். 12வது நாள் - ஜிப்சம், யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் இடுதல்13வது நாள் - நுண்ணூட்டக்கலவை இடுதல்14-16வது நாள் - கோனோ கருவியைக்கொண்டு முதல் களை எடுத்தல்30-35வது நாள் - முதல் மேலுரமிடல்40-45வது நாள் - கோனோ கருவியைக் கொண்டு 2வது களை எடுத்தல்55-60வது நாள் - கோனோவீடர் கருவியைக்கொண்டு 3வது களை எடுத்தல்70-75வது நாள் - 3வது மேலுரமிடுதல்வினையியல் கதிர் முற்றும் பருவம் - அறுவடை.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்