சின்னச்சின்ன செய்திகள்
* விதை இருப்பு நிலவரம்: ஏ.டி.டி(ஆர்)47 எப்1 விதை: 6.64 டன், விலை ரூ.24/கிலோ. கிடைக்குமிடம்: உழவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 106. 0452-242 2956, 242 3046.தென்னை நாற்றுக்கள்: நெட்டை - 2898 எண்ணிக்கை இருப்பு உள்ளது. விலை ரூ.30/கன்று. கிடைக்குமிடம்: வாசனை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1284.மண் புழு உரம்: இருப்பு 750 கிலோ, விலை ரூ.6/கிலோ. கிடைக்குமிடம்: மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1230.நெல் ஆடுதுறை 43 (ஆதார விதை1) - இருப்பு 1822 கிலோ. விலை ரூ.24/கிலோ. கிடைக்குமிடம்: பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125. 04563-260 736.* சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை: கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி, 25 சென்டில் வாழை இவைகளோடு 4 சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார். 4 சென்டில் மாதம் ரூ.4000 வரை வருமானம் கிடைப்பதாகக் கூறும் இவர் கடைபிடிக்கும் சாகுபடி நுட்பங்கள்: சிவப்புக்கீரைக்கு வண்டல்மண் ஏற்றது. கீரைகளுக்கு பட்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சாகுபடி செய்வார்கள். ஆனால் இவர் நாற்று பாவி சரியான இடைவெளியில் நடவுசெய்து நல்ல விளைச்சல் பெற்றுள்ளார்.20 சதுரடி பரப்பில் மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழு உரம் ஆகியவற்றில் தலா 20 கிலோ அளவுக்கு பரப்ப வேண்டும். அதில் விதைகளைத் தூவி விதைத்து பூவாளியால் நீர் தெளித்து வரவேண்டும். விதைத்த 25ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.4 சென்ட் நிலத்தை நன்றாக கிளறி, 50 கிலோ சாம்பல், 100 கிலோ தொழு உரம், 1 கிலோ பொடித்த கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும். பிறகு 12 அடி நீளம், இரண்டரை அடி அகலத்திற்கு பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி வாய்க்கால் இருக்க வேண்டும். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 7 அலங்குலம் இடைவெளி விட்டு நாற்றுக்களை பாத்தியில் நடவு செய்ய வேண்டும். தண்ணீர் அவசியம் என்பதால் செழும்பாக தண்ணீர் கட்டவேண்டும். நடவு செய்த 7ம் நாள் 250 மில்லி மீன் அமிலக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மீன்கழுவிய தண்ணீரை ஒருநாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் சரிபங்கு தண்ணீரில் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். நடவு செய்த 15ம் நாள் மூலிகை பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகள் அண்டாது. மகசூல் 10,000 கட்டு கீரை கிடைக்கும். கட்டு 6 ரூபாய்க்கு விற்பனையானாலும் செலவு போக ரூ.40,000 வருமானம் கிடைக்கும். (தகவல்: பசுமை விகடன், 10.3.11, தொடர்புக்கு: சேவியர், 97896 37500)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.சம்பங்கி சாகுபடி - விவசாயி அனுபவம் (படம் உண்டு)ரகம் - கிழக்கு வீரிய ரகம். பயிரிடும் நிலத்தின் அளவு - தோராயமாக 30 சென்ட். உழவு முறை - வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும். நன்கு ஆறிய பின் 8 யூனிட் அளவு (4 டிராக்டர்) நன்கு மக்கிய சாணமாக இடவேண்டும். இதை 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும். பின் அதை நிலத்தில் நன்கு இறைத்துவிட வேண்டும். இறைத்த பின் ஒரு உழவு விட்டுவிட வேண்டும். கிழங்கின் அளவு 30 சென்ட், 10 மூடை.விதை நேர்த்தி: கிழங்கு வாங்கிக்கொண்டு வந்து வேப்பமரத்தின் நிழலில் உலரவைக்க வேண்டும். உலரவைத்த கிழங்கை 3 நாட்களுக்கு 3 முறையாக கை பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அருகம்புல் வேர் கோரைக்கிழங்கு மற்ற களைகள் அந்த கிழங்கிலிருந்து முற்றிலும் அகற்றப்படும்.பார் அமைக்கும் முறை: சிறிய சிறிய வாய்க்கால்கள் எடுத்து கால் அடி வீதத்தில் மூன்று எட்டுக்கு ஒரு நெறை வீதமாக மூன்று பாத்திகளாக அமைக்க வேண்டும். ராஜா வாய்க்கால் கரை 2 அடியில் அமைக்க வேண்டும். பாத்தி அரை அடிக்கு ஒரு கரை வீதமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.கிழங்கு நடவுமுறை: ஒரு அடிக்கு ஒரு இடத்தில் மூன்று, நான்கு கிழங்கை அடிப்பாகம் பூமிக்குள்ளும் மேல்பாகம் பூமிக்கு மேல்நோக்கி இருக்குமாறு நடவு செய் வேண்டும்.நீர்ப்பாசனம்: கிழங்கு நட்ட பிறகு உடனே நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் தன்மையை பொருத்து கரிசல் மண்ணாக இருந்தால் 5 நாட்களுக்கு ஒரு முறையும் செவ்வல் மண்ணாக இருந்தால் 3 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். நான்காவது முறை தண்ணீர் பாய்ச்சியபிறகு களை தோன்ற ஆரம்பிக்கும்.களை நிர்வாகம்: சூழ்நிலைக்கேற்றவாறு 10-15 நாட்களுக்கு ஒரு களை எடுக்க வேண்டும். 30-40 நாட்களில் கிழங்கு முளைப்புத்திறன் வந்துவிடும். களைகள் வந்து கிழங்கினை பாதிக்காதவாறு களைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.வளர்ப்பு முறை: நட்ட 60 நாட்களில் 5-10 செ.மீ. வரை கிழங்கு வளர்ந்துவிடும். நன்கு வளர்ந்தபின் 10-15 செ.மீ. வந்தபின் இயற்கை வேளாண்மை உரம் இடவேண்டும்.மேலுரம்: இயற்கை வேளாண்மை உரத்தை 30 சென்டுக்கு 1 மூடை வீதமாக எடுத்து ஒரு டிரம்மில் போட்டு தண்ணீர் கலக்கி, நீர் பாய்ச்சும்போது ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் செடி நன்றாக வளர்ந்து கரும்பச்சை நிறத்தில் இருக்கும். பரவலாக அரும்புகள் தோன்றி பூக்கள் வர ஆரம்பிக்கும்.உரம் இடும் முறை: இயற்கை வேளாண்மை உரத்தை 30 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு விடவேண்டும். நன்றாக தண்ணீர் பாயக்கூடிய நிலத்திற்கு மட்டும் பொருந்தும். இவ்வாறு நடவு செய்து களை இல்லாமல் இருக்கும் நிலத்திற்கு நோய் தாக்கும் அபாயம் இல்லை.பயிர் பாதுகாப்பு அறை: 30 நாட்களுக்கு ஒரு முறை 3 லிட்டர் மாட்டு கோமியம், அரைலிட்டர் ஆறியவடிகஞ்சி, பால் 300 மில்லி, மஞ்சள்தூள்-300 கிராம் கலந்து பவர் ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும். இயற்கை உரத்தை பயன்படுத்த இயற்கை முறையில் சாகுபடி செய்தோமானால் பூ நன்றாகவும் பருமனாகவும் இருக்கும். நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல விலையும் கிடைக்கும்.அறுவடை: எல்லா மாதங்களிலும் வரும்.வாழ்நாள்: 5, 6 வருடம் வரை இருக்கும்.தொடர்புக்கு: சவடமுத்து, அலவாச்சிபட்டி, திண்டுக்கல். 98436 32040.-கே.சத்தியபிரபா, உடுமலை.தரிசு நிலத்தில் சப்போட்டா சாகுபடிமண்: சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. பருவம்: ஜூலை - ஆகஸ்ட். ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3. பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள்பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை மட்டத்திலிருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும். சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை. உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும். அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.ஊடுபயிர்: ஆரம்ப வருடங்களில் மர வரிசைகளுக்கு நடுவே காய்கறிப் பயிர்களையும், குறுகிய காலப் பழப்பயிர்களான பப்பாளி போன்றவற்றையும் சாகுபடி செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம்.அறுவடை மற்றும் மகசூல்: சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும். ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும். இந்தப் பயிரின் பழ முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை. ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும். பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக்கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும். ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன்கள் மகசூலாகக் கிடைக்கும். தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லிஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657.எம்.அகமது கபீர், பி.எஸ்சி(அக்ரி)., எம்.பி.ஏ.,வேளாண்மை ஆலோசகர், அக்ரி கிளினிக், தாராபுரம். 93607 48542.