உள்ளூர் செய்திகள்

செம்மண் நிலத்திலும் கல்லுருண்டை சம்பா நெல்

செம்மண் நிலத்தில், கல்லுருண்டை சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது: பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், செம்மண் நிலத்தில் கல்லுருண்டை சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். இது, 135 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். ஒரு சில இடங்களில், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறுபடும். இந்த கல்லுருண்டை சம்பா நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி அடர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். பாரம்பரிய ரக நெல்லை, ரசாயன உரங்கள் இன்றி, இயற்கை உரங்கள் போட்டு சாகுபடி செய்யும் போது, குறைந்த நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும். இந்த நெல்லை அரிசி மற்றும் மாவாக மதிப்பு கூட்டும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும். இந்த கல்லுருண்டை சம்பா அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கஞ்சி மற்றும் பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். சந்தையில், கல்லுருண்டை அரிசி வரவேற்பு பெற்றிருப்பதால், கூடுதல் விலை கொடுத்தும் வாங்க, மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !