உள்ளூர் செய்திகள்

மதிப்புக்கூட்டிய வருவாய்க்கு தான்றிக்காய் மர சாகுபடி

தான்றிக்காய் மர சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி.அஜய்குமார் கூறியதாவது: செம்மண் கலந்த சவுடு மண்ணில் காய்கறி, வேர்க்கடலை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். அந்த வரிசையில்,தான்றிக்காய் மரங்களை சாகுபடி செய்து வருகிறோம். இது, நீண்ட ஆண்டுகளுக்கு மகசூல் தரக்கூடியது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தான்றிக்காய் மகசூல் கொடுக்க துவங்கும். சித்த மருத்துவத்திற்கு, தான்றிக்காய் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக, தான்றிக்காய் மரத்தில், ஒரு கிளையில் ஒவ்வொரு இலைக்கு காய்கள் கொத்து கொத்தாக காய்க்க கூடிய தன்மை உடையது. இந்த காயில், விதை நீக்கிவிட்டு பவுடராக, மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம். இந்த மரக்கிளையில் பதியம் போட்டு, செடிகளாகவும், விதைகளின் மூலமாக செடிகளை உற்பத்தி செய்யலாம். இதுதவிர, 10 ஆண்டுகள் கடந்த மரங்களில், மரப்பொருட்களை தயாரித்து உபயோகப்படுத்தலாம். காய்கள், இலை, மரம், பட்டை அனைத்து விதமான பொருட்களும் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுவதால், அனைத்து விதங்களிலும் வருவாய் ஈட்ட வழி வகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: டி. அஜய்குமார், 82700 20800.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !