கூடுதல் நெல் மகசூலுக்கு உகந்த புழுதி விதைப்பாடு
புழுதி விதைப்பாடு குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், ஒற்றை நாற்று நடுவு முறை, டிரம் ஷிடர் விதைப்பு முறை, நேரடி விதைப்பு என, பல வித சாகுபடி முறைகள் உள்ளன. இதில், புழுதி விதைப்பு முறையும் ஒன்றாகும்.புழுதி விதைப்பிற்கு ஏற்ப நிலத்தை நன்கு பண்படுத்தி அதன் பின், விதைப்பு கருவி மூலமாக விதைக்க வேண்டும்.குறிப்பாக, ஆடி மாதத்தில் விதைத்தால், கார்த்திகை மாதம் அறுவடைக்கு வரும். ஏற்கனவே சிவன் சம்பா ஆகிய பலவித ரக நெற்பயிர்களை புழுதியில் சாகுபடி செய்து, 1 ஏக்கருக்கு, 24 மூட்டை நெல் மகசூலை ஈட்டி உள்ளேன்.தற்போது, கருப்பு கவுனி, காட்டுயாணம், துாயமல்லி, தங்க சம்பா, சிவன் சம்பா ஆகிய ஐந்து விதமான நெல் விதைப்பு செய்ய உள்ளேன். இதிலும், கூடுதல் மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எஸ்.வீரராகவன்98941 20278.