சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி
தமிழகத் தில் காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படும் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, இலைப்பேன், அசுவினி போன்றவை நேரடியாக பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு புகையிலை, மரவள்ளி, பருத்தி, சோயாமொச்சை போன்ற பயிர்களில் இலைச்சுருள் என்னும் நோயைத் தோற்றுவிக்கக்கூடிய நச்சுயிரி யையும் வெண்டைப்பயிரில் நரம்பு வெளுத்தல் நோயைத் தோற்றுவிக்கக்கூடிய நச்சுயிரியையும் இந்தப் பூச்சிகள் பரப்பு கின்றன. மேலும் இந்தப் பூச்சிகள் வெளியிடும் தேன் போன்ற திரவம் இலைகள், காய்கள் போன்றவற்றின் மேல் படிந்திருந்து, அதன்மேல் கரும்படல நோய் என்னும் பூசண நோயும் தோன்றி பயிருக்கு மேலும் அதிகக் கேடு விளைவிக்கிறது.இந்தப் பூச்சிகள் பயிரின் எல்லா வளர்ச்சிப்பருவத்திலும் குறிப்பாக இளம் வளர்ச்சிப்பருவத்தில் அதிக அளவில் தாக்கி, அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது. இளம்பூச்சிகளும் வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பரப்பில் ஏராளமான எண் ணிக்கையில் இருந்துகொண்டு தொடர்ந்து சாற்றை உறிஞ்சுவ தால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் காய்ந்துவிடுகின் றன. பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளபோது இலைகள், பூக்கள், பிஞ்சுக்காய்கள் ஆகியவை அதிக அளவில் உதிர்ந்துவிடும்.