உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரகதி பாதை திட்டத்தில் 7,110 கி.மீ., சாலை மேம்பாடு

பிரகதி பாதை திட்டத்தில் 7,110 கி.மீ., சாலை மேம்பாடு

பெங்களூரு:'பிரகதி பாதை' திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 7,110 கி.மீ., சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் கோனரெட்டியின் கேள்விக்கு, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பதில்:பிரதம மந்திரியின் கிராம சதக் திட்டத்தில் சாலைகள் அமைக்கும் விதிகளை, மத்திய அரசு எளிமைப்படுத்த தவறியது. இதனால் மாநில அரசு சார்பில் பிரகதி, கல்யாண் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பிரகதி பாதை திட்டத்தின் கீழ் 5,190 கோடி ரூபாய் செலவில் 7,110 கி.மீ., சாலையை மேம்படுத்த, மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரகதி பாதை திட்டம் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் தொகுதியிலும் 15 கி.மீ., துாரம் அமையும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்தின் மொத்த செலவில் 10 சதவீத வரம்பிற்குள் விவசாயிகளின் நிலங்களை இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் உறுப்பினர் பாபாசாகேப் பாட்டீல் எழுப்பிய கேள்விக்கு, பிரியங்க் கார்கே பதில் அளிக்கையில், ''சென்னம்மா கிட்டூரை தாலுகாவாக அறிவித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.'புதிய தாலுகாவில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட கூடாது' என, முந்தைய பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேவைகள் அடிப்படையில் பல்வேறு புதிய அலுவலகத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை