உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு?

பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு?

பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு, இங்குள்ள ஐ.டி., நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பல்வேறு தொழில் வளங்கள் காரணம். பெங்களூரு நகரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், பல நாடுகளை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். நகரில் மக்கள்தொகை பெருக, பெருக போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்க ஆரம்பித்தது.பெங்களூரு ரூரல், பெங்களூரை சுற்றியுள்ள துமகூரு, கோலார், ராம்நகர், சிக்கபல்லாபூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெங்களூரு நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில், புறநகர் ரயில் இயக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரினர்.கடந்த 1963ல் ஹெச்.ஏ.எல்.,லில் பணியாற்றும் ஊழியர்கள் வசதிக்காக, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து விமானபுரா ரயில் நிலையம் வரை, புறநகர் ரயில் இயக்கப்பட்டது.இதையடுத்து, பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த ஆண்டு 1983.

ஜாபர் ஷெரிப் ஆர்வம்

ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரிப், பெங்களூரு எம்.பி.,க்கள், புறநகர் ரயில் திட்டத்தை கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டினர்.பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 58 கி.மீ., துாரத்திற்கு 650 கோடி ரூபாய் செலவில், புறநகர் ரயில் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, உத்தேச ரயில் திட்டம் குறித்து நன்கு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்தது.அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரிப், மத்திய அரசிடம் புறநகர் ரயில் பணிக்கான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா, புறநகர் ரயில் பணிகளுக்கான அறிக்கையை நிராகரித்தார்.கடந்த 2007ல், பெங்களூரில் விரிவான போக்குவரத்து திட்டங்களை துவங்க ரயில் இந்திய மற்றும் பொருளாதார சேவைகள் கமிஷனை, கர்நாடக அரசு அமைத்தது.

பிரஜா பெங்களூரு

இந்த கமிஷன் சில ஆய்வுகளை மேற்கொண்டு பெங்களூரில் 204 கி.மீ., துாரத்திற்கு புறநகர் ரயில் திட்ட பணிகளை துவங்க பரிந்துரைத்தது. அதன்பின் 2010ல் 'பிரஜா பெங்களூரு' என்ற அமைப்பு 376 கி.மீ., துாரத்திற்கு, புறநகர் ரயில் திட்டத்தைத் துவங்க அரசுக்கு பரிந்துரைத்தது.அதன்பின்னர் 2012ல் ரயில் இந்திய மற்றும் பொருளாதார சேவைகள் கமிஷன் 440 கி.மீ., துாரத்திற்கு புறநகர் ரயில் திட்டத்துக்கு பரிந்துரைத்தது.இந்நிலையில், 2013ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சித்தராமையா, அந்த ஆண்டு பட்ஜெட்டில், புறநகர் ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமென அறிவித்தார். ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவும், புறநகர் ரயில் திட்டப் பணிகளை அமைப்பதில், கர்நாடக அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்று கூறினார்.இதையடுத்து புறநகர் ரயில் திட்டம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

நரேந்திர மோடி

கடந்த 2022ல் பிரதமர் நரேந்திர மோடி, புறநகர் ரயில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். நிலம் கையகப்படுத்துதல், ரயில்களை பராமரிக்க பராமரிப்பு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டால், பெங்களூரில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள், விரைவில் பெங்களூரு நகருக்குள் வர முடியும்.

2007ல் முன்மொழிவுகள்

பாதை துாரம் (கி.மீ.,)l கெங்கேரி- - பெங்களூரு சிட்டி 13l பெங்களூரு சிட்டி - ஒயிட் பீல்டு 24l பெங்களூரு சிட்டி - லோட்டே கொல்லஹள்ளி 23l லோட்டே கொல்லஹள்ளி- - எலஹங்கா 7l பானஸ்வாடி - பி.எம்.ஆர்.,பவுண்டரி 29l கெங்கேரி- - பி.எம்.ஆர்., பவுண்டரி 9l யஷ்வந்த்பூர் - பி.எம்.ஆர்., பவுண்டரி 14l பி.எம்.ஆர்., பவுண்டரி- - ஓசூர் 12l பி.எம்.ஆர்., பவுண்டரி - ராம்நகர் 23l பி.எம்.ஆர்., பவுண்டரி- - துமகூரு 50மொத்தம் 204

2010ல் முன்மொழிவுகள்

வழித்தடம் கி.மீ.,l யஷ்வந்த்பூர் - சிக்கப்பல்லாபூர் 60l பென்னிகானஹள்ளி - தொட்டபல்லாப்பூர் 37l யஷ்வந்த்பூர்- - ஓசூர் 66l துமகூரு அல்லது நெலமங்களா- - பென்னிகானஹள்ளி 83l எலஹங்கா- - பங்கார்பேட்டை 80l எலஹங்கா- - ராம்நகர் 50மொத்தம் 376தொகை எவ்வளவு?

2012ல் முன்மொழிவுகள்

வழித்தடம் கி.மீ.,l பெங்களூரு சிட்டி- - மாண்டியா 92.88l பெங்களூரு சிட்டி - யஷ்வந்த்பூர் 5.35l யஷ்வந்த்பூர்- - துமகூரு 64l யஷ்வந்த்பூர்- - எலஹங்கா 12.45l எலஹங்கா- - பையப்பனஹள்ளி 19.23l யஷ்வந்த்பூர் - பையப்பனஹள்ளி 16.12l எலஹங்கா - தொட்டபல்லாப்பூர் 20.72l எலஹங்கா- - சிக்கப்பல்லாபூர் 46.05l பையப்பனஹள்ளி- - ஓசூர் 48.59l பெங்களூரு சிட்டி- - பையப்பனஹள்ளி 10.76l பையப்பனஹள்ளி- - பங்காருபேட்டை 59.45l சோழதேவனஹள்ளி - குனிகல் 45.2மொத்தம் 440.8பெங்களூரு புறநகர் திட்ட ரயில் பணிகள் 160.457 கி.மீ., துாரத்திற்கு அமைய உள்ளது. 57 ரயில் நிலையங்கள் வரும். இதற்காக 18,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் என்ன உள்ளது?

2012ல் முன்மொழிவுகள்

வழித்தடம் கி.மீ.,l பெங்களூரு சிட்டி- - மாண்டியா 92.88l பெங்களூரு சிட்டி - யஷ்வந்த்பூர் 5.35l யஷ்வந்த்பூர்- - துமகூரு 64l யஷ்வந்த்பூர்- - எலஹங்கா 12.45l எலஹங்கா- - பையப்பனஹள்ளி 19.23l யஷ்வந்த்பூர் - பையப்பனஹள்ளி 16.12l எலஹங்கா - தொட்டபல்லாப்பூர் 20.72l எலஹங்கா- - சிக்கப்பல்லாபூர் 46.05l பையப்பனஹள்ளி- - ஓசூர் 48.59l பெங்களூரு சிட்டி- - பையப்பனஹள்ளி 10.76l பையப்பனஹள்ளி- - பங்காருபேட்டை 59.45l சோழதேவனஹள்ளி - குனிகல் 45.2மொத்தம் 440.8பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பல ரயில் நிலையங்கள் ஒருங்கிணைந்த வணிகமயங்களாக செயல்படும். மெட்ரோ மற்றும் பிற போக்குவரத்துக்கு மக்கள் எளிதில் மாற முடியும். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் தானியங்கி கட்டண அமைப்பு, நடைமேடைகளில் திரை கதவுகள் இருக்கும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எவ்வளவு வேகம்?

2012ல் முன்மொழிவுகள்

வழித்தடம் கி.மீ.,l பெங்களூரு சிட்டி- - மாண்டியா 92.88l பெங்களூரு சிட்டி - யஷ்வந்த்பூர் 5.35l யஷ்வந்த்பூர்- - துமகூரு 64l யஷ்வந்த்பூர்- - எலஹங்கா 12.45l எலஹங்கா- - பையப்பனஹள்ளி 19.23l யஷ்வந்த்பூர் - பையப்பனஹள்ளி 16.12l எலஹங்கா - தொட்டபல்லாப்பூர் 20.72l எலஹங்கா- - சிக்கப்பல்லாபூர் 46.05l பையப்பனஹள்ளி- - ஓசூர் 48.59l பெங்களூரு சிட்டி- - பையப்பனஹள்ளி 10.76l பையப்பனஹள்ளி- - பங்காருபேட்டை 59.45l சோழதேவனஹள்ளி - குனிகல் 45.2மொத்தம் 440.8புறநகர் திட்ட ரயில் பாதையில் ரயில்களை மணிக்கு 90 கி.மீ., வேகத்திலும், ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் போது 35 கி.மீ., வேகத்திலும் இயக்க அனுமதி வழங்கப்படும். தண்டவாளம் அகலப் பாதையாக வரும்.வழித்தடங்களுக்கு பெயர்

2012ல் முன்மொழிவுகள்

வழித்தடம் கி.மீ.,l பெங்களூரு சிட்டி- - மாண்டியா 92.88l பெங்களூரு சிட்டி - யஷ்வந்த்பூர் 5.35l யஷ்வந்த்பூர்- - துமகூரு 64l யஷ்வந்த்பூர்- - எலஹங்கா 12.45l எலஹங்கா- - பையப்பனஹள்ளி 19.23l யஷ்வந்த்பூர் - பையப்பனஹள்ளி 16.12l எலஹங்கா - தொட்டபல்லாப்பூர் 20.72l எலஹங்கா- - சிக்கப்பல்லாபூர் 46.05l பையப்பனஹள்ளி- - ஓசூர் 48.59l பெங்களூரு சிட்டி- - பையப்பனஹள்ளி 10.76l பையப்பனஹள்ளி- - பங்காருபேட்டை 59.45l சோழதேவனஹள்ளி - குனிகல் 45.2மொத்தம் 440.8பெங்களூரு புறநகர் ரயில் திட்ட பணிகள் நான்கு பாதைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூக்களின் பெயர்களை குறிக்கும் வகையில் 'சம்பிகே', 'மல்லிகே', 'பாரிஜாதா', 'கனகா' என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

2012ல் முன்மொழிவுகள்

வழித்தடம் கி.மீ.,l பெங்களூரு சிட்டி- - மாண்டியா 92.88l பெங்களூரு சிட்டி - யஷ்வந்த்பூர் 5.35l யஷ்வந்த்பூர்- - துமகூரு 64l யஷ்வந்த்பூர்- - எலஹங்கா 12.45l எலஹங்கா- - பையப்பனஹள்ளி 19.23l யஷ்வந்த்பூர் - பையப்பனஹள்ளி 16.12l எலஹங்கா - தொட்டபல்லாப்பூர் 20.72l எலஹங்கா- - சிக்கப்பல்லாபூர் 46.05l பையப்பனஹள்ளி- - ஓசூர் 48.59l பெங்களூரு சிட்டி- - பையப்பனஹள்ளி 10.76l பையப்பனஹள்ளி- - பங்காருபேட்டை 59.45l சோழதேவனஹள்ளி - குனிகல் 45.2மொத்தம் 440.8

'சம்பிகே'

பெங்களூரு சிட்டி -- விமான நிலையம் இடையில் 42.52 கி.மீ., துாரம் ஆகும். இந்தப் பாதையின் பெயர் 'சம்பிகே'. இந்தப் பாதையில் ஸ்ரீராமபுரா, மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், முத்தியால் நகர், லோட்டேகொல்ல ஹள்ளி, கொடிகேஹள்ளி, ஜூடிசியல் லே- - அவுட், எலஹங்கா, நிட்டே மீனாட்சி, பெட்டதஹலசூரு, தொட்டஜாலா, விமான முனையம், தேவனஹள்ளி.ரயில்களை பராமரிக்க, அக்குபேட்டில் பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

'மல்லிகே'

பையப்பனஹள்ளி- - சிக்கபானவரா இடையில் 28.72 கி.மீ., துாரம் ஆகும். இந்தப் பாதையின் பெயர் 'மல்லிகே'.மைதர ஹள்ளி, செட்டிஹள்ளி, ஜாலஹள்ளி, யஷ்வந்த்பூர், லோட்டேகொல்ல ஹள்ளி, ஹெப்பால், கனகநகர், நாகவாரா, காவேரி நகர், பானஸ்வாடி, சேவாநகர், கஸ்துாரிநகர் ரயில் நிலையங்கள் வரும்.ஜாலஹள்ளியில் பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

'பாரிஜாதா'

கெங்கேரி- - ஒயிட்பீல்டு இடையில் 35.52 கி.மீ., துாரத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகிறது. இந்தப் பாதையின் பெயர் 'பாரிஜாதா'ஆர்.வி., கல்லுாரி, ஞானபாரதி, நாயன்டஹள்ளி, கிருஷ்ணதேவராய, ஜெகஜீவன் ராம் நகர், பெங்களூர் சிட்டி, குமார பார்க், பெங்களூரு கன்டோன்மென்ட், பெங்களூரு கிழக்கு, பையப்பன ஹள்ளி, கே.ஆர்.புரம், ஹூடி ரயில் நிலையங்கள் வரும்.

'கனகா'

ஹீலலிகே -- ராஜனு குன்டே இடையில் 47.74 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்படுகிறது. இந்தப் பாதையின் பெயர் 'கனகா'.முத்தன ஹள்ளி, எலஹங்கா, ஜக்கூர், ஹெட்டே நகர், தனிச்சந்திரா, ஹென்னுார், ஹொரமாவு, தனிச்சந்திரா, பென்னிகான ஹள்ளி, ககதசாபுர, தொட்டன குந்தி, மாரத்தஹள்ளி, பெல்லந்துார் ரோடு, கார்மேலரம், அம்பேத்கர் நகர், ஹஸ்கூர், சிங்கேன அக்ரஹாரா, பொம்மசந்திரா ரயில் நிலையங்கள் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி