உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வீட்டின் மீது மோதி 10 பேர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வீட்டின் மீது மோதி 10 பேர் காயம்

துமகூரு: பெங்களூரில் இருந்து கோலாருக்கு நேற்று அதிகாலை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், 10க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்று கொண்டிருந்தது. திப்டூர் சித்தாபுரா கிராமம் அருகே செல்லும் போது, பஸ்சின் முக்கபக்க டயர் வெடித்தது.இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் இருந்த புட்டண்ண கவுடா என்பவரின் வீட்டில் மோதி நின்றது. இதனால் வீட்டின் ஒரு பக்க சுவர் கடும் சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பஸ்சில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, திப்டூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த திப்டூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின் ஓட்டுநரின் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'இச்சம்பவம் குறித்து போலீசார் முழுமையான விசாரணையை துவங்கி, அதற்கான காரணங்களை கண்டறிய முயற்சித்து வருகின்றனர். காயமடைந்த பயணியருக்கு முறையான சிகிச்சை, இழப்பீடு வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை