மேலும் செய்திகள்
சாமுண்டி மலைக்கு இன்று இரவு செல்ல தடை
16 minutes ago
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
16 minutes ago
ரேணுகாசாமி கொலை வழக்கு; பிறழ்சாட்சியான தாய்?
17 minutes ago
பெங்களூரு: டிக்கியில் அதிக பொருட்கள் ஏற்றி வந்த 15 ஆம்னி பஸ்களுக்கு, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அபராதம் விதித்தனர். சித்ரதுர்காவின் ஹரியூர் அருகே ஜவன்கொண்டனஹள்ளி கிராமத்தில், கடந்த 25ம் தேதி ஆம்னி பஸ் மீது, கன்டெய்னர் லாரி மோதி, பஸ் தீ பிடித்த விபத்தில் 7 பேர் உடல்கருகி இறந்தனர். இந்த சம்பவம் எதிரொலியாக, ஆம்னி பஸ்கள் டிக்கியில் அதிக பொருட்கள் ஏற்றி வர, போக்குவரத்து துறை தடை விதித்தது. ஆனாலும் பஸ் டிக்கிகளில் அதிக பொருட்கள் ஏற்றி வருவது பற்றி, ஆர்.டி.ஓ., எனும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலையில் தேவனஹள்ளி சுங்கச்சாவடியில், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஊர்களில் இருந்து பெங்களூரு வந்த ஆம்னி பஸ்களில் சோதனையிட்டனர். இதில் 15 பஸ்களில் அதிக பொருட்கள் ஏற்றி வந்தது தெரிந்தது. பஸ்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், இனி டிக்கியில் பொருட்கள் ஏற்றி வந்தால், பஸ் பறிமுதல் செய்யப்படும் என்று, டிரைவர்களை எச்சரித்து அனுப்பினர்.
16 minutes ago
16 minutes ago
17 minutes ago