உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்டோ மீது கார் மோதியதில் 2 பேர் பலி

ஆட்டோ மீது கார் மோதியதில் 2 பேர் பலி

சீனிவாசப்பூர்: சீனிவாசப்பூர் அருகே உள்ள துப்பள்ளி கிராமத்தில் பயணியர் சென்ற ஆட்டோ மீது, பின்னால் வந்த கார் மோதியதில், ஆட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். ஆட்டோ ஒன்றில் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த யாஸ்மின், 35. ஹருள குன்டே கிராமத்தைச் சேர்ந்த சபீர் பாட்ஷா, 40. ஆகிய இருவர் நேற்று சென்று கொண்டிருந்தனர். சீனிவாசப்பூர் அருகே உள்ள துப்பள்ளி கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார், ஆட்டோ மீது மோதியது. இதில் பயணித்த யாஸ்மின், சபீர் பாட்ஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ அப்பளமானது. ராயல்பாடு போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்