தர்மஸ்தலா வழக்கு விசாரணை எஸ்.ஐ.டி.,யில் மேலும் 20 பேர்
பெங்களூரு : தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து பெண்களை கொன்று சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கு பற்றி விசாரிக்க, அரசு அமைத்துள்ள எஸ்.ஐ.டி., குழுவில், கூடுதலாக 20 போலீஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்த, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், சவும்யலதா, ஜிதேந்திர குமார் தயமா உள்ள நிலையில், மேலும் 20 போலீஸ் அதிகாரிகளை இணைத்து டி.ஜி.பி., அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மங்களூரு சிவில் உரிமைகள் அமலா க்க இயக்குநரக எஸ்.பி., சிமோன், உடுப்பி சைபர் கிரைம் டி.எஸ்.பி., லோகேஷ், தட்சிண கன்னடா சைபர் கிரைம் டி.எஸ்.பி., மஞ்சுநாத், சி.எஸ்.பி., பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாத், சம்பத், குஸ்மதார், கோகிலா நாயக், வயலட் பெமினா, சிவசங்கர், உத்தர கன்னடா சிர்சி ரூரல் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் கவுடா, உடுப்பி பைந்துார் இன்ஸ்பெக்டர் சாவித்ரு தேஜ். சிர்சி டவுன் எஸ்.ஐ., ராஜ்குமார் உகலி, அங்கோலா எஸ்.ஐ., சுகாஷ், முண்டகோடு எஸ்.ஐ., வினோத் கல்லப்பண்ணவர், மங்களூரு மெஸ்காம் பிரிவு எஸ்.ஐ., குணபால், உடுப்பி டவுன் ஏ.எஸ்.ஐ., சுபாஷ் காமத், ஏட்டுக்கள் உடுப்பி காபு ஹரிஷ் பாபு, மல்பே பிரகாஷ், குந்தாபுரா நாகராஜ், சிக்கமகளூரு வன நடமாடும் பிரிவு ஏட்டு தேவராஜ் ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.