உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  42 நாட்களில் 22 புலிகள் பிடிப்பு

 42 நாட்களில் 22 புலிகள் பிடிப்பு

மைசூரு: ''கடந்த 42 நாட்களில், வனத்தில் இருந்து, ஊருக்குள் நுழைந்த 22 புலிகள் பிடிக்கப்பட்டன,'' என, வனத்துறை அதிகாரி பரமேஷ் தெரிவித்தார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: புலிகளின் விஷயத்தில், விவசாயிகள் பயப்பட வேண்டியது இல்லை. அவர்களுடன் நாங்கள் கைகோர்த்து பணியாற்றுகிறோம். இதற்கு முன் புலிகள் தென்பட்டதால், மைசூரின் பல்வேறு கிராமங்களுக்கு, ஹுலிகட்டே ஹுலியூரு, ஹுலிதுர்கா என, பெயர் ஏற்பட்டது. இதே கிராமங்களில், இப்போதும் புலிகள் தென்படுகின்றன. புலிகளை கண்டு விவசாயிகள் அஞ்ச வேண்டாம். உடனடியாக வனத்துறையினருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக உதவி எண்ணும் உள்ளது. மைசூரு மாவட்டத்தின், ஹெச்.டி.கோட்டே, சரகூரு, நஞ்சன்கூடு, ஹுனசூரு தாலுகாக்களின் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புலிகளின் பீதி, அதிகம் இருந்தது. கடந்த 42 நாட்களில், இக்கிராமங்களில் புகுந்து தொல்லை கொடுத்த 22 புலிகள் பிடிக்கப்பட்டன. புலிகளை பிடிக்க வனத்துறையில் அனைத்து விதமான உபகரணங்களும் உள்ளன. ட்ரோன், தேவையான அளவில் ஊழியர்களும் உள்ளனர். மக்கள் மற்றும் போலீசாரின் உதவி இருந்தால் மட்டுமே, எங்களின் நடவடிக்கை வெற்றி அடையும். பிடிபட்ட புலிகளை, புலிகள் மறுவாழ்வு மையத்தில் விட்டுள்ளோம். டாக்டர்களின் ஆலோசனைப்படி புலிகளை வனத்தில் விடுவது குறித்து, முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ