உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இடமாற்றப்பட்ட 22 ஆசிரியர்கள் பரிதவிப்பு

இடமாற்றப்பட்ட 22 ஆசிரியர்கள் பரிதவிப்பு

பெங்களூரு: இடமாற்றம் செய்யப்பட்ட 22 ஆசிரியர்களுக்கு எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கூறாததால் அவர்கள், அரசு அலுவலகங்களுக்கு அலைபாய்கின்றனர். காலியாக உள்ள இடங்களில், தங்களை நியமிக்கும்படி மன்றாடுகின்றனர். மாநிலத்தின் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளின் 55 ஆசிரியர்களை இடம் மாற்றி, ஆகஸ்ட் 22ம் தேதி, கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை கூறவில்லை. இதனால் இரண்டு மாதங்களாக கல்வித்துறை கமிஷனர், கூடுதல் கமிஷனரின் அலுவலகத்துக்கு அலைபாய்ந்தனர். அதன்பின் 33 ஆசிரியர்கள், காலியான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். மீதியுள்ள 22 ஆசிரியர்களுக்கு, இடம் கூறவில்லை. பெங்களூரின் 14, பெலகாவியின் ஏழு, கலபுரகியின் ஒருவர், பணியில்லாமல் பரிதவிக்கின்றனர், ஜாதிவாரி சர்வேக்கும் இவர்களை பயன்படுத்தவில்லை. இரண்டு மாதங்களாக ஊதியம் இல்லாததால், குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை. பல அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு, அலைந்து சோர்வடைந்த ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் தங்களை பணியில் நியமிக்கக்கோரி கல்வித்துறை பொதுச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !