மேலும் செய்திகள்
20,378 சிறப்பு பஸ்கள் தீபாவளிக்கு இயக்க முடிவு
07-Oct-2025
பெங்களூரு: 'தீபாவளியை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக, கூடுதலாக 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: அக்., 17 முதல் 20 வரையிலும்; அக்., 22 முதல் 26 வரையிலும் பெங்களூரில் இருந்து பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு கூடுதலாக 2,500 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கெம்பே கவுடா பஸ் நிலையம், மைசூரு சாலை பஸ் நிலையம், சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, ஷிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபூர், சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, மைசூரு, பிரியாபட்டணா, விராஜ்பேட்டை, குஷால் நகர், மடிகேரி கொப்பால் உட்பட பல மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். அதுபோன்று, அண்டை மாநிலங்களான தமிழகத்தின் சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, திருச்சி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படும். வெளியூர் செல்லும் பயணியர் வசதிக்காக முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://www.ksrtc.karnataka.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
07-Oct-2025