உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் ஒருவர் கொலை சிறுவன் உட்பட 3 பேர் கைது

பெங்களூரில் ஒருவர் கொலை சிறுவன் உட்பட 3 பேர் கைது

தனிசந்திரா: முன் பகை காரணமாக, ஒருவரை கொன்ற வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு தனிசந்திராவின் ஆகாஷ் வாணி லே - அவுட்டில் வசித்து வந்தவர் ஆஞ்சனப்பா, 40. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இம்மாதம் 23ம் தேதி, அப்பகுதியில் ஆஞ்சனப்பா இறந்து கிடந்தார்.இது தொடர்பாக, அம்ருதஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஞ்சனப்பா மாரடைப்பில் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, பிரேம், தர்ஷன், மேலும் ஒரு சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆஞ்சினப்பாவை கொன்றதை ஒப்புக் கொண்டனர்.ஆடு மேய்த்து கொண்டிருந்த பிரேமுக்கும், ஆஞ்சனப்பாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இம்மாதம் 23ம் தேதி பிரேம், தர்ஷன், சிறுவன் ஆகியோர் ஆகாஷ்வாணி லே - அவுட் அருகே வந்து கொண்டிருந்தனர். இவர்களை பார்த்த ஆஞ்சனப்பா, பிரேமுடன் சண்டை போட்டுள்ளார்.அப்போது ஏற்பட்ட மோதலில், கட்டையால் அவரது தலையில் மூவரும் சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். மூவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ