மேலும் செய்திகள்
தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி
18-Jul-2025
தாவணகெரே : கொட்டகையில் நுழைந்த சிறுத்தைகள், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்று தின்றன. சிறுத்தைகள் கூட்டமாக வந்ததால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர். தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகாவில் சிரிகெரே கிராமத்தில் வசிப்பவர் விவசாயி திள்ளப்பா. சிரிகெரே கிராஸ் அருகில் ஆட்டுக் கொட்டகை அமைத்துள்ளார். ஆடு மேய்க்க வருவோர், இந்த கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைப்பர். பெலகாவியை சேர்ந்த சிலர் ஆடுகளை மேய்ச்சலுக்காக, நேற்று முன் தினம் சிரிகெரேவுக்கு அழைத்து வந்தனர். நள்ளிரவு கன மழை பெய்ததால், ஆடுகளை அடைத்துவிட்டு, வேறு இடத்துக்கு சென்றிருந்தனர். அப்போது மூன்று சிறுத்தைகள், கொட்டகையில் நுழைந்து, ஆடுகளை கொன்று தின்றன. சிறுத்தையின் தாக்குதலுக்கு, 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. காலையில் ஆடு மேய்ப்பவர்கள் வந்து பார்த்தபோது, ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்; வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிரிகெரே சுற்றுப்பகுதிகளில், மூன்று சிறுத்தைகள் நடமாடுவதால், எச்சரிக்கையாக இருக்கும்படி கிராமத்தினரை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
18-Jul-2025