உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 40 சார்ஜிங் மையங்கள்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 40 சார்ஜிங் மையங்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு, 40 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பெஸ்காம் நிர்வாக இயக்குநர் சிவசங்கர் கூறியதாவது: நெடுஞ்சாலை, சுற்றுலா தலம், பொது இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்ய மையங்கள் நிறுவுவதன் மூலம் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்கும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும். எனவே, பெங்களூரு - பெலகாவி தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி என, எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கு 40 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பி.எம்., இ - டிரைவ் திட்டம் மூலம் சுற்றுலா தலங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்கப்படும் மயூரா ஹோட்டல்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் விரைவில் அமைக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் முடிவாக கட்டாயம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை