உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடகாவுக்கு 45 டி.எம்.சி., தண்ணீர் ;மத்திய அமைச்சரிடம் சிவகுமார் கோரிக்கை

 கர்நாடகாவுக்கு 45 டி.எம்.சி., தண்ணீர் ;மத்திய அமைச்சரிடம் சிவகுமார் கோரிக்கை

- நமது நிருபர் -: நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகாவுக்கு 45 டி.எம்.சி., தண்ணீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கோரிக்கை வைத்து உள்ளார். 90 சதவீதம் டில்லியில் உள்ள கர்நாடக பவனில் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி: நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக, தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உள்ளார். அவரது தலைமையில் மாநில நீர்பாசன அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகாவுக்கு 45 டி.எம்.சி., தண்ணீர் வழங்க கோரிக்கை வைத்தேன். பீமா ஆற்று படுகைக்கு கூடுதலாக 5 டி.எம்.சி., தண்ணீர் திறக்கும்படி கேட்டேன். கோதவரியை, காவிரியுடனும், பெட்ஹி நதியை வரதாவுடன் இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ந திகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு, கர்நாடக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் செலவு ஆகும். இதில் 90 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும் ஏற்கும். மகதாயி திட்டத்திற்கு அனுமதி கொடுக்க, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், சி.ஆர்.பாட்டீலிடம் கோரிக்கை வைத்தேன். மேகதாது அணை திட்டத்திற்காக, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. அனைத்து நீர்பாசன திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, மீண்டும் டில்லி வரும்படி, ஜல்சக்தி அமைச்சர் கூறினார். எனக்கு ஐந்து ஆண்டுகளும், துணை முதல்வராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதில், அதிகமான மகிழ்ச்சி உள்ளது. இது தான் நிரந்தர பதவி. மத்திய அமைச்சர்களை சந்திக்கவும், கர்நாடகாவின் வளர்ச்சி திட்டங்களை பற்றி, ஆலோசிப்பதற்காக மட்டுமே நான் டில்லிக்கு வந்துள்ளேன். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டில்லியில் தான் இருக்கிறார். ராகுல் நேற்று முன்தினம் தான், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து வந்தார். அவர்களை சந்தித்து, தொல்லை கொடுக்க நான் விரும்பவில்லை. மைசூரில் அஹிந்தா மாநாடு நடத்த முடிவு செய்திருப்போருக்கு, நல்லது நடக்கட்டும். காங்., தேசிய பொதுச் செயலர் எம்.பி., பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என கூறுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவது சரியல்ல. ராகுலை பிரதமராக பார்க்க வேண்டும் என்ற ஆசை, பிரியங்காவுக்கும் உள்ளது. குழப்பம் வேண்டாம் இத்தகைய சூழ்நிலையில், தேவையற்ற கருத்துகளை கூறி , குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. எம்.எஸ்.கிருஷ்ணா தான் தன்னை அபெக்ஸ் வங்கி தலைவர் ஆக்கினார் என்று, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கூறி உள்ளார். உண்மை என்னவென அவரது மனசாட்சிக்கு தெரியும். கிருஷ்ணா இப்போது உயிருடன் இல்லை. அப்போது என்ன நடந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை