தனியாக பிரிந்த 6 ரயில் பெட்டி துங்கா நதி பாலத்தில் பரபரப்பு
ஷிவமொக்கா : தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலின் ஆறு பெட்டிகள் துங்கா நதி ரயில்வே பாலத்தில் தனியாக பிரிந்து சென்றதால், பயணியர் அச்சம் அடைந்தனர். ஷிவமொக்கா மாவட்டம், தலகுப்பா ரயில் நிலையத்திலிருந்து, நேற்று பிற்பகல் 2:50 மணிக்கு, தலகுப்பா - மைசூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் - 16205 எண், பயணியருடன் புறப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1miak3z9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாலை 5:00 மணி அளவில் ஷிவமொக்கா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள துங்கா நதி ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ரயிலின் ஆறு பெட்டிகள் தனியே பிரிந்தன. 10 பெட்டிகள் இணைக்கப்பட்ட நிலையில் இன்ஜின் சென்று கொண்டிருந்தது. ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த ரயில்வே பணியாளர், ரயில் இன்ஜின் பைலட்டை தொடர்பு கொண்டு, ரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். இன்ஜினை ஒட்டி பத்து பெட்டிகளும், மீதி ஆறு பெட்டிகளும் துங்கா நதி ஆற்றுப் பாலத்தில் தனித்தனியாக நின்றன. இதனால் ரயிலில் இருந்த பயணியர் அச்சம் அடைந்தனர். இருபுறமும் உள்ள ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதை பலரும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், ரயில் பெட்டிகளை இணைத்தனர். பிறகு, ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. பயணியர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தனியாக பிரிந்து சென்ற ரயில் பெட்டிகளை பலரும் தங்கள் மொபைல் போனில் மும்மரமாக வீடியோ எடுத்தனர்.