உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூருக்கு புறப்பட்ட 9 யானைகள்

 மைசூருக்கு புறப்பட்ட 9 யானைகள்

மைசூரு: மைசூரு தசரா கஜ பயணம் துவக்க நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற அபிமன்யு யானைக்கு, பூக்கள் துாவி பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. மைசூரு தசராவில் ஜம்பு சவாரியில் பங்கேற்க, முதல்கட்டமாக தனஞ்செயா, மகேந்திரா, ஏகலைவா, பிரசாந்த், கோபி, ஸ்ரீராம், ஸ்ரீகாந்த், லட்சுமி, காவேரி ஆகிய ஒன்பது யானைகளுக்கு, ஹூன்சூர் தாலுகா வீரனஹொசஹள்ளியில் கஜ பயணம் நேற்று காலை 10:00 முதல், 10:28 மணிக்குள் நடந்தது. முன்னதாக, யானைகளின் கால்கள் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசப்பட்டன. பின், யானைகளுக்கு பிடித்த தின்பண்டங்கள் படைக்கப்பட்டன. கடந்த ஆறு ஆண்டுகளாக, ஜம்பு சவாரியின் போது தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யுவுக்கு வனத்துறை அதிகாரிகள் மலர் துாவி பிரிவு உபசார விழா நடத்தினர். அபிமன்யு ஓய்வு பெறுவதை பார்த்த பாகன்கள், சில வனத்துறை ஊழியர்கள் அழுதனர். அதை தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் மாவட்ட பொறுப்பு வகிக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா, வனத்துறை அதிகாரிகள் பூஜை செய்தும், மலர் துாவியும் துவக்கி வைத்தனர். அதன் பின், ஒன்பது யானைகளும் மைசூருக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. லாரியில் சென்ற யானைகள், நேற்று மாலை மைசூரு நகரின் அசோகபுரத்தில் உள்ள வனபவனில் தங்க வைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின், நாளை அரண்மனை வளாகத்திற்குள் அழைத்து செல்லப்படும். யதீந்திரா கூறுகையில், ''தசராவில், 25 ஆண்டுகளாக பங்கேற்று, கடந்த ஆறு ஆண்டுகளாக தங்க அம்பாரியை சுமந்து வந்த அபிமன்யுவுக்கு, பிரிவு உபசார விழா நடத்தி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ''தசராவுக்கு மீண்டும் அபிமன்யுவை கொண்டு வருவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்தாண்டு தசரா பண்டிகையின் போது, கம்பாலா விளையாட்டு போட்டி நடக்கும். போட்டி நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை