மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
13-Dec-2025
பெங்களூரு: 'வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 1 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: வனத்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், இரவும், பகலுமாக தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர். அவர்களின் வாழ்க்கைக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துறை ஊழியர்களுக்கு, 1 கோடி ரூபாய்க்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கும் விபத்து காப்பீடு வழங்கப்படும். அத்துடன், 10 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடும் செய்து தரப்படும். இதற்காக, பாங்க் ஆப் பரோடாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.எனவே, பாங்க் ஆப் பரோடாவில், ஊழியர்கள் வங்கி கணக்கு துவக்கி கொள்ள வேண்டும். மைசூரு சாம்ராஜ்நகரில் சுற்றித்திரியும் புலிகளை பிடிக்க தேவையான உபகரணங்கள், கூடுதல் கால்நடை மருத்துவர்கள், கும்கி யானைகள் போன்றவை உடனடியாக அனுப்பப்படும். மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அதேசமயம், விலங்குகளின் உயிரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
13-Dec-2025