உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகை உமாஸ்ரீக்கு டாக்டர் ராஜ்குமார் விருது

நடிகை உமாஸ்ரீக்கு டாக்டர் ராஜ்குமார் விருது

பெங்களூரு: 'மைசூரில் 2018 - 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நவ., 3ல் நடக்கிறது' என, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது. துறை கமிஷனர் ஹேமந்த் நிம்பல்கர் வெளியிட்ட அறிக்கை: மைசூரில் 2018 -- 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நவ., 3ல் நடக்கிறது. 'டாக்டர் ராஜ்குமார் விருது' மூத்த நடிகை உமாஸ்ரீக்கும்; 'புட்டண்ண கனகல்' விருது இயக்குனர் நஞ்சுண்டேகவுடாவுக்கும்; 'டாக்டர் விஷ்ணுவர்த்தன் விருது' தயாரிப்பாளரும், இயக்குநருமான ரிச்சர்ட் காஸ்டெல்லினோவுக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம், 50 கிராம் தங்க பதக்கம் வழங்கப்படும். மூத்த பத்திரிகையாளர் ரகுநாத் எழுதிய 'பெல்லிடோர்' திரைப்பட கட்டுரைகள் என்ற படைப்பு, 2019ம் ஆண்டின் சிறந்த திரைப்பட இலக்கிய ஆண்டு விருதுக்கு தேர்வாகி உள்ளது. இந்த புத்தகத்தை, அங்கிதா புத்தக பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. இவ்விருது, புத்தக ஆசிரியருக்கும், வெளியீட்டாளருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இவ்விருது 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 50 கிராம் வெள்ளி பதக்கம் கொண்டது. ஸ்ரீநாத் ஹடகலி இயக்கிய 'குலே' குறும்படம், 2019ம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட விருதுக்கு தேர்வாகி உள்ளது. மனோகர் எஸ்.அய்யர் தயாரித்த இந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 50 கிராம் வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை