| ADDED : செப் 11, 2026 02:46 AM
பெங்களூரு: பெங்களூரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஜி.பி.ஏ.,வின் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் முதல்வர் சிவகுமார் தலைமையில், பெங்களூரில் உள்ள ஜி.பி.ஏ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ஜி பி ஏ தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், தலைமை செயலர் ஷாலினி, அமைச்சர்கள் ஜார்ஜ், ஜமீர் அகமது கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பெங்களூரு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை வேகப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உள்கட்டமைப்பு சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.