உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஊதியம் வழங்காததால் பண்டிகையில் மகிழ்ச்சி இல்லை; போராட்டம் நடத்துவதாக ஆஷா ஊழியர்கள் எச்சரிக்கை

ஊதியம் வழங்காததால் பண்டிகையில் மகிழ்ச்சி இல்லை; போராட்டம் நடத்துவதாக ஆஷா ஊழியர்கள் எச்சரிக்கை

பெங்களூரு: ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக அரசு ஊதியம் வழங்காவிட்டால், போராட்டம் நடத்துவதாக எச்சரித்துள்ளனர். இது குறித்து, ஆஷா ஊழியர்கள் சங்க செயலர் நாகலட்சுமி கூறியதாவது: எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஊதியம் வழங்குகின்றன. இரண்டு அரசுகளும், குறிப்பிட்ட தொகையை வழங்குகின்றன. கடந்த மூன்று மாதங்களாக இரு அரசுகளும் ஊதியம் வழங்கவில்லை. நாங்கள் பல முறை வேண்டுகோள் விடுத்தும், அரசுகள் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கிய பின், ஊதியம் வழங்குவதாக கூறுகின்றனர். வாழ்க்கை உயர் அதிகாரிகளுக்கு, ஆறு மாதம் ஊ தியம் வராவிட்டாலும், அவர்களால் வாழ்க்கை நடத்த முடியும். எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் எங்களை போன்றவர்களால் வாழ்க்கை நடத்த முடியாது. சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், முட்டை வழங்கப்படுகிறது. இதற்கும் நிதியும் வழங்குவது இல்லை. எங்கள் சொந்த பணத்தை செலவிட்டு முட்டைகள் வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கோரி, இதற்கு முன் நாங்கள் போராட்டம் நடத்திய போது, ஊதியத்தை உயர்த்துவதாக அரசு உறுதி அளித்தது. ஆனால் உயர்த்தப்படவில்லை. மூன்று மாதமாக ஊதியமும் இல்லை. வாழ்க்கை நடத்த முடியாமல், அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கட்டாயத்துக்கு, அரசு கொண்டு வந்துள்ளது. அரசின் அலட்சியம் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. வெறும் வயிறு ஆஷா ஊழியர்களான நாங்கள், சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வருகிறோம். ஊதியம் குறித்து, அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஜாதி வாரி சர்வே நடப்பதால், அதிகாரிகள் அந்த பணிக்கு நியமிகப்பட்டுள்ளனர். கோப்புகளை கவனிக்க அதிகாரிகள் இல்லை என, காரணம் கூறுகின்றனர். நாங்கள் கடன் வாங்கி, மக்களுக்கு செலவிட்டு, நாங்கள் வெறும் வயிற்றில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஊதியம் இல்லாமல் தசரா சென்றது; தீபாவளி வந்தும், எங்களுக்கு ஊதியம் இல்லை. பண்டிகை மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை. உடனடியாக அரசு ஊதியம் வழங்காவிட்டால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். சில நாட்களுக்கு முன், முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். அவரும் ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும்படி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை ஊதியம் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை