உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாகனங்கள் பழுதால் நெரிசல் டிராபிக் ஊரு ஆன பெங்களூரு

வாகனங்கள் பழுதால் நெரிசல் டிராபிக் ஊரு ஆன பெங்களூரு

பெங்களூரு : பெங்களூரு நகரை இனி 'டிராபிக் ஊரு' என்று அழைக்கலாம். அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.பூங்காக்களின் நகரம், சிலிகான் நகரம் என பெருமை பெற்ற பெங்களூரு, கடந்த சில நாட்களாக 'குப்பை நகரம்' என்று பெயர் பெற்றது.உலகளவில் போக்குவரத்து நெரிசலில் மூன்றாவது இடம் பிடித்த பெங்களூரை, இனி 'டிராபிக் ஊரு' என்று அழைக்கலாம். அந்தளவுக்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.இதற்கு நகரில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள், ஒயிட் டாப்பிங் பணிகள், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர், சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளே காரணம். அத்துடன், சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று நகரில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் அரசு பி.எம்.டி.சி., ஏசி, சொகுசு பஸ்கள், சரக்கு வாகனம், இரண்டு லாரிகள், இரண்டு பொக்லைன்கள், ஒரு சாலை போடும் இயந்திரம் ஆகியவை ஆங்காங்கே பழுதாகி நின்றன.இதனால், ஐ.டி.பி.எல்., சாலை, கோரகுண்டேபாளையா, ஹெப்பால் மேம்பாலம், டின் பேக்டரி, யஷ்வந்த்பூர் மேம்பாலம், தேவரபீசனஹள்ளி, காடுகோடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கோடையில் வாட்டும் வெயிலால், பரபரப்பான நேரத்தில் ஏற்படும் நெரிசல், வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. சிலிகான் சிட்டி என்று அழைப்பதற்கு பதிலாக 'டிராபிக் ஊரு' என்று அழைக்கலாம் என்று ஒரு வாகன ஓட்டி நக்கல் அடித்துச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை