உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாரதிய பாரத் தீபாவளி நிகழ்ச்சி மங்., தமிழ் சங்கத்தினர் பங்கேற்பு

பாரதிய பாரத் தீபாவளி நிகழ்ச்சி மங்., தமிழ் சங்கத்தினர் பங்கேற்பு

மங்களூரு: கேசவ சம்ருத்தி சமிதி நடத்திய, பாரதிய பாரத் தீபாவளி நிகழ்ச்சியில், மங்களூரு தமிழ்ச்சங்கத்தினரும் பங்கேற்றனர். மங்களூரு நகரம் மன்னகுட்டா என்ற இடத்தில் உள்ள சங்க நிகேதன் அரங்கில், கேசவ சம்ருத்தி சமிதி என்ற அமைப்பின் சார்பில், தென்மாநிலங்களில் வசிக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக, பாரதிய பாரத் தீபாவளி என்ற பெயரில் நேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மங்களூரு தமிழ்ச்சங்கத்தினர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். தமிழ் பேசும் குழந்தைகள் ஓவியம் வரைவது உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். திருக்குறள் சங்க இலக்கிய நிகழ்வுகளை பதாகைகளாக எடுத்து சென்றனர். ‘செம்மொழியாம் தமிழ் மொழி’ பாடலை இசைக்க செய்து, பாடலுடன் இணைந்து பாடி அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ