உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பா.ஜ., - எம்.எல்.ஏ., அலுவலகம் காங்கிரசார் திடீர் முற்றுகை

 பா.ஜ., - எம்.எல்.ஏ., அலுவலகம் காங்கிரசார் திடீர் முற்றுகை

உடுப்பி: பரசுராமர் சிலை வடிவமைத்ததில் நடந்த முறைகேட்டிற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். உடுப்பியின் கார்கலாவில் பரசுராமர் தீம் பார்க் உள்ளது. இங்கு, 57 அடி உயர பரசுராமர் சிலை உள்ளது. கடந்த, 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், அவசரமாக இந்த சிலையை கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் திறந்து வைத்தார். திறந்த சில நாட்களில் வெண்கலத்திற்கு பதிலாக பித்தளையால் சிலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சி.ஐ.டி., விசாரிக்கிறது. சிலையை செதுக்கிய சிற்பி கிருஷ்ணா நாயக் கைது செய்யப்பட்டார். சில அதிகாரிகள் மீது வழக்கு பதிவானது. இந்நிலையில், சிலை வடிவமைத்ததில் நடந்த முறைகேட்டில் எம்.எல்.ஏ., சுனில்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, கார்கலாவில் உள்ள அவரது எம்.எல்.ஏ., அலுவலகத்தை, காங்கிரசார் நேற்று காலையில் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பரசுராம் சிலை இருந்த போஸ்டர்களை, எம்.எல்.ஏ., அலுவலக சுவர்களில் ஒட்ட முயன்றனர். இதற்கு சுனில்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பா.ஜ., - காங்கிரஸ் தொண்டர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு விரைந்த வந்த போலீசார், காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர். காங்கிரசை கண்டித்து பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க எம்.எல்.ஏ., அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ