உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு படியும் பணம் கேட்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு

அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு படியும் பணம் கேட்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு

தங்கவயல்: “அரசு அலுவலகங்களின் ஒவ்வொரு படியும் பணம் கேட்கிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்கள் செல்ல அச்சப்படுகின்றனர்,” என, தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி தெரிவித்தார்.கர்நாடக காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, ராபர்ட்சன் பேட்டையில் நேற்று பா.ஜ.,வினர் தர்ணா நடத்தினர். அப்போது, சம்பங்கி பேசியதாவது:கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.சமீபத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி வெற்றியை கொண்டாடியபோது உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால், 11 பேர் உயிரிழந்தனர்.வெற்றி விழாவை ஒரு வாரம் கடந்த பின் நடத்தலாம் என அப்போதைய பெங்களூரு போலீஸ் ஆணையர் தயானந்த் தெரிவித்ததை அலட்சியப்படுத்தினர்.ஆளும் காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு. ஆனால், அப்பாவி போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்காக அரசு கஜானா காலியாகி உள்ளது. அரசு ஊழியர்களுக்கு உரிய நாளில் சம்பளம் கிடைக்கவில்லை.ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு படிக்கட்டும் பணம் எதிர்பார்க்கிறது. அரசு அலுவலகங்கள் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த அரசு லாயக்கற்றதாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ.,வின் தங்கவயல் கிராம பகுதி தலைவர் லட்சுமண், நகர பகுதி தலைவர் சுரேஷ் குமார், கவுன்சிலர் வேணி பாண்டியன், பாபி சுரேஷ், மேகநாதன், ரவிகுமார், நவராஜ் குமார், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை