உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துருப்பிடித்த டேங்கர்களில் குடிநீர் பா.ஜ., - எம்.எல்.சி., குற்றச்சாட்டு

துருப்பிடித்த டேங்கர்களில் குடிநீர் பா.ஜ., - எம்.எல்.சி., குற்றச்சாட்டு

பெங்களூரு: '' பழைய துருப்பிடித்த டேங்கர்களுக்கு வர்ணம் தீட்டி, அசுத்தமான குடிநீரை காங்கிரஸ் அரசு வினியோகிக்கிறது,'' என மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயண சாமி குற்றஞ்சாட்டினார்.பொது மக்களின் வீட்டு வாசலுக்கு, சுத்தமான குடிநீர் வினியோகிக்க 'நடமாடும் காவிரி' என்ற பெயரில் திட்டம் கொண்டு வரப்பட்டது. துணை முதல்வர் சிவகுமார், இம்மாதம் 9ம் தேதி, திட்டத்தை துவக்கி வைத்தார். குடிநீர் வினியோகிக்க 250 டேங்கர்களை துவக்கினார்.இந்த டேங்கர்களை மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி சாமி, எம்.எல்.சி., கேசவ பிரசாத்துடன், நேற்று பார்வையிட்டார். துருப்பிடித்த டேங்கர்களுக்கு, பெயின்ட் அடித்து புதிய டேங்கர்களாக காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.சமூக வலைதளத்தில் சலவாதி நாராயணசாமி கூறியுள்ளதாவது:துருப்பிடித்த டேங்கர்களில் 'அசுத்த நீர்' வினியோகம். இது காங்கிரஸ் அரசின் எட்டாவது வாக்குறுதி. மக்களுக்கான திட்டம் என, கூறி கொண்டு துருப்பிடித்த டேங்கர்களின் மேற்புற நிறத்தை மாற்றி, புதிது போன்று காண்பித்து உள்ளனர். இதில் அசுத்தமான குடிநீர் வழங்கி மக்களின் ஆரோக்கியத்தை பாழாக்க முற்பட்டுள்ளனர்.திட்டத்தின் சூத்திரதாரியான, பெங்களூரு நகர் பொறுப்பு அமைச்சரின் சிந்தனையும் துருப்பிடித்துள்ளது. 'வீட்டு வாசலுக்கு சுத்தமான குடிநீர் திட்டம்' என, அழைப்பதற்கு பதில் 'துருப்பிடித்த டேங்கர்களில் வீட்டு வாசலுக்கு அசுத்த நீர் திட்டம்' என, அழைப்பது நல்லது. அசுத்தமான டேங்கர்களிலும் விளம்பரம் செய்து உள்ளது நகைப்புக்குரியது.விதான்சவுதா வளாகத்திலேயே, இத்தகைய துருப்பிடித்த டேங்கர்களை நிறுத்தி உள்ளனர். இது காங்கிரஸ் அரசின், மக்களுக்கு எதிரான மனப்போக்கை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !