மேலும் செய்திகள்
விஜயேந்திராவின் தலைவர் பதவி தப்புமா?
06-May-2026
விஜயேந்திராவின் தலைவர் பதவி நீடிக்குமா?
22-Apr-2026
பெங்களூரு: பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், வரும் 23ம் தேதி இரவு பெங்களூருக்கு வருகிறார். கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் 24 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ., தேசிய தலைவராக நிதின் நபின், கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்று கொண்டார். தலைவரான பின், முதல் முறையாக வரும் 23ம் தேதி கர்நாடகா வருகிறார். அன்றைய தினம் இரவு பெங்களூரு வரும் அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். மறுநாள் காலை கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகளுடன் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டு ஆண்டுகளில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடப்பதால், இப்போது இருந்தே தேர்தலுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்க உள்ளார். நிதின் நபின் வந்து சென்ற பிறகு, அடுத்த மாத துவக்கத்தில், கர்நாடக பா.ஜ.,வில் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடக பா.ஜ., உயர்மட்ட குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரை நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மத்திய இணை அமைச்சர்கள் ரயில்வே துறை சோமண்ணா, தொழிலாளர் நல துறை ஷோபா, கார்கலா எம்.எல்.ஏ., சுனில் குமார் ஆகியோர் உயர்மட்ட குழுவுக்குள் வரலாம் என்றும் பேச்சு அடிபட ஆரம்பித்து உள்ளது. இது ஒரு புறம் இருக்க விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, கட்சிக்குள் ஒரு கோஷ்டி போர்க்கொடி துாக்கி உள்ளது. ஆனாலும், விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து மாற்ற, கட்சி மேலிடத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், விஜயேந்திராவே தலைவராக தொடர நிறைய வாய்ப்பு இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
06-May-2026
22-Apr-2026