உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பா.ஜ., மாநில தலைவர் மாற்றம் எத்னால் ஆரூடம்

 பா.ஜ., மாநில தலைவர் மாற்றம் எத்னால் ஆரூடம்

விஜயபுரா: ''அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மாற்றப்படுவார்,'' என, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார். விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி: சட் டசபை கூட்டத்தொடரின் போது அசோக்கும், சுனில்குமாரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், விஜயேந்திராவோ ஐந்து நிமிடம் கூட நின்று போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதியானதும், தங்கள் இருப்பை காட்டிக் கொள்ளவே, பாதயாத்திரை நடத்துகிறார். இந்த பேரணிக்கு யார் பாதகமாக இருப்பார், யார் சாதகமாக இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, இந்த பாதயாத்திரை மூலம் தங்களை கதாநாயகர்களாக காட்டிக் கொள்ள நினைக்கின்றனர். அடுத்தாண் டு மார்ச்சிற்குள் விஜயேந்திரா மாநில தலைவர் பதவியி ல் இருந்து நீக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி