உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தேர்வில் முறைகேடுகளை தடுக்க குழு அமைப்பு

 தேர்வில் முறைகேடுகளை தடுக்க குழு அமைப்பு

பெங்களூரு: தேர்வில் முறைகேடுகள் நடப்பதை, என்னென்ன வழிகளில் தடுக்கலாம் என்று, அரசுக்கு பரிந்துரை செய்ய, அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு நடப்பது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியுள்ளது. கே.பி.எஸ்.சி.,யில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று, முதல்வர் சிவகுமார் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நினைக்கின்றனர். இந்நிலையில், கடந்த 21ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேர்வில் முறைகேடுகள் நடப்பதை என்னென்ன வழிகளில் தடுக்கலாம் என்று, அரசுக்கு பரிந்துரை செய்யவும், ஆலோசனை கூறவும், அமைச்சரவை துணை குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி அமைச்சரவை துணை குழு நேற்று அமைக்கப்பட்டது. நிலையான அட்டவணை இந்த குழுவின் தலைவராக சுகாதார துறை அமைச்சர் காதர் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வி துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, மருத்துவ கல்வி அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு, தேர்வுகள் மற்றும் ஆள்சேர்ப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள்; வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுப்பது எப்படி; வெளிப்படைத்தன்மை, நேர்மையாக தேர்வு நடத்துவது குறித்து பரிந்துரைக்கும். மாநில அளவிலான தேர்வுகள், ஆள்சேர்ப்புக்கு நிலையான மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட அட்டவணையை தொகுத்து வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி