மேலும் செய்திகள்
சினி கடலை
24-Oct-2025
பனசங்கரி: நடிகர் துருவ் சர்ஜா, அவரது கார் டிரைவர் அஸ்வின் மற்றும் ரசிகர்கள் மீது, பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் செய்துள்ளார். கன்னட திரையுலகின் இளம் நடிகர் துருவ் சர்ஜா, 37. இவரது வீடு பெங்களூரு பனசங்கரியில் உள்ளது. இவரை சந்திக்க வரும் ரசிகர்கள் தங்களது வாகனங்களை, சர்ஜா வீடு இருக்கும் சாலையில் ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் வசிப்போர், தங்கள் வீட்டிற்குள் செல்லவும், வெளியே வரவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், துருவ் சர்ஜாவின் பக்கத்து வீட்டுக்காரர் மனோஜ் என்பவர், பனசங்கரி போலீசில் நேற்று புகார் செய்து உள்ளார். துருவ் சர்ஜா, நடிகர் அர்ஜுனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
24-Oct-2025