உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.67 லட்சம் பெற்று மோசடி திரைப்பட பிரசாரகர் மீது புகார்

 ரூ.67 லட்சம் பெற்று மோசடி திரைப்பட பிரசாரகர் மீது புகார்

பெங்களூரு: பிரபல நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா அருண்குமார். 'கொத்தலவாடி' திரைப்படம் மூலமாக, தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் பெங்களூரின், ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், புஷ்பா அருண்குமார் அளித்த புகார்: என் திரைப்படத்தை பற்றி, 'புரமோட்' செய்யும் பொறுப்பை, ஹரிஷிடம் ஒப்படைத்திருந்தேன். இதற்காக நடப்பாண்டு மே 18ம் தேதி, 10 லட்சம் ரூபாய், மே 21ல் ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன்பின் வெவ்வேறு தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக 'புரமோட்' செய்ய, 24 லட்சம் ரூபாய் வாங்கினார். 'புரமோட்' செய்யவே படிப்படியாக 64.87 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இவ்வளவு தொகையை பெற்ற பின்னரும், ஆகஸ்ட் 1ல் திரைக்கு வந்த திரைப்படம் பற்றி, எந்த விதமான 'புரமோஷனும்' செய்யவில்லை. ஜூலை 23ல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டையும் ஹரிஷ் செய்திருக்க வேண்டும். அவர் செய்யவில்லை. தங்கள் சொந்த செலவில் நடிகர்களே டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்தினர். திரைப்பட, 'புரமோஷன்' தொடர்பாக, தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை, இது பற்றி கேள்வி எழுப்பியபோது, என்னை மிரட்டினார். எனக்கும், திரைப்பட இயக்குநர் ஸ்ரீராஜுக்கும் பலரிடம் இருந்து, போனில் மிரட்டல் வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ